டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அமெரிக்க வரித்தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்க தூதருடன் கலந்துரையாடல்.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்’குடன், இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கான, இலங்கையின் ஏற்றுமதியில் விதிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரிகள் குறித்து, அவர் இதன் பொது கலந்துரையாடியுள்ளார்.
இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், தமது X பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதில் அமெரிக்காவுடன் இலங்கையின் வர்த்தக உறவை சமநிலைப்படுத்துவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றதாக பதிவிட்டுள்ளார்.