உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
பட்டலந்த தவிர வேறு சித்திரவதைக்கூடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியீடு

நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படும் நான்கு தசாப்தங்களுக்கு முன்னரான பட்டலந்த சித்திரவதை கூடத்தைப் போலவே, ஏராளமான அரசாங்கத்துக்கு ஆதரவு சித்திரவதைக்கூடங்கள் இலங்கையில் இருந்ததை உறுதிப்படுத்தும் சில தகவல்களை இலங்கையில் காணாமல் போனார் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் போது காணாமல் போனவர்களை விசாரிக்க ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட மத்திய வலய ஆணைக்குழுவின் செயலாளர், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP), இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS) மற்றும் இலங்கை பிரச்சாரம் (SLC) ஆகியவற்றால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள் மூலம் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் 200ற்கும் மேற்பட்ட சித்திரவதைக் கூடங்களைக் காட்டும் முதல் வரைபடத்தை தொகுக்கப்பட்ட ITJP மற்றும் JDS வெளியிட்ட மாத்தளை சித்திரவதைக் கூடங்கள் மற்றும் காணாமல் போன சம்பவங்களில் கோட்டாபய ராஜபக்சவின் பங்கு குறித்து 2022 மற்றும் அதற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து விசாரணை செய்ய எந்த அரசாங்கமும் ஆர்வம் காட்டவில்லை. http://www.jdslanka.org/
தேர்தல் காலத்தில் பட்டலந்த சித்திரவதைக் கூடம் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்த தற்போதைய அரசாங்கம் அவசரமாக ஆர்வம் காட்டுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அது குறித்து கேள்வி எழுப்பிய பின்னர் அல் ஜசீரா சர்வதேச ஊடக வலையமைப்பு ஏற்படுத்திய தாக்கமே காரணமாக அமைந்துள்ளது.
கடந்த தசாப்தத்தில் மாத்தளை, மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த விடயத்தில் நாடாளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு எந்த அரசாங்கமும் முன்மொழியவில்லை.
1980களின் பிற்பகுதியில் நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களை விசாரணை செய்ய ஜனாதிபதி சந்திரிக்காவால் நிறுவப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் மத்திய வலைய செயலாளர் எம்.சி.எம்.இக்பால் அண்மையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படலந்த வெறும் ஒரு சித்திரவதை கூடம் என்பதை வெளிப்படுத்துகிறார்.
“ஆனால் பட்டலந்த எனப்படுவது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட பல தடுப்பு முகாம்களில் ஒன்று அவ்வளவுதான். உதாரணமாக, கண்டியில் உள்ள புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் ஒரு சித்திரவதைக் கூடம் இருந்தது.”
அந்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது மற்ற தோழர்களைப் போல மரணத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, தற்செயலாக தனது உயிரைக் காப்பாற்றப்பட்டதற்காக ‘சான்ஸ் காரயா’ என்ற புனைப்பெயரைப் பெற்ற ஒரு இளைஞன், காணாமல் போனோர் தொடர்பிலான மத்திய வலய ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியத்திலிருந்து தான் இதைப் பற்றி அறிந்துகொண்டதாக இக்பால் குறிப்பிடுகின்றார்.
இக்பால் சொன்னதை கேட்க – https://x.com/JDSLanka/status/
இது மீண்டுவர அனுமதிக்கப்படாத பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவரின் கதை மாத்திரமே.
இது பதுளையில் உள்ள ஹாலிஎல மோட்டர்ஸ் சித்திரவதை கூடம் பற்றிய கதை – https://x.com/SLcampaign/
மத்திய வலைய ஆணைக்குழுவால் ஆவணப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழு பட்டியலையும் இந்த இணைப்பில் அறிந்துகொள்ள முடியும். – http://tinyurl.com/2zyhxeek