இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
ஈரானில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் – 14 பேர் உயிரிழப்பு!
ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று (26) ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நாட்டின் ஊடக அறிக்கையின்படி, 750 பேர் காயமடைந்துள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் தொகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தீப்பரவல் காரணமாக, குறித்த பகுதியில் உள்ள பல கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.