இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
எட்டு வயது குழந்தையை தவிக்கவிட்டு தப்பியோடிய தாய் – வெலிஓயாவில் சம்பம்

வெலிஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் வசிக்கும் பெண்ணொருவருக்கு நீதிமன்றம் மூலம் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்து.
இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணின் வீடு தேடிச் சென்ற போது அவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த எட்டு வயதுக்குழந்தையை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
அதன் பின் குழந்தையின் தாயார் வந்து பொலிஸில் சரணடைந்த பின்னரே குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து வினவியபோது குழந்தையின் தாயார் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தர்ப்பத்தில் குழந்தை தனிமையில் இருந்த காரணத்தினால் குழந்தையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளது.