இலங்கை ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய அத்தியாயம், கடந்த 2025 ஜூன் 21 ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது. Home Lands Group நிறுவனத்தின் முக்கியமான அபிவிருத்தித் திட்டமான Pentara Residencies, இதன்போது கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது, இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான தனி முதலீட்டு திட்டம் எனும் பெருமையை பெற்றுள்ளது. “Signature Night: Beyond the Skyline” எனப் பெயரிடப்பட்ட…
சிங்கப்பூரில் மீண்டும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 14,200 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அதிகரிப்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், புதிய திரிபுகள் பரவுவதும் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LF.7 மற்றும் NB.1.8 எனப்படும் கொவிட்-19 திரிபுகள் அதிகளவில் பரவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளைப் பயன்படுத்துமாறும், விசேட பூஸ்டர் ஊசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.