டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அமெரிக்க நாட்டவருக்கு 2,500 டொலர் இழப்பீடு பெற உதவிய ChatGPT

சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட அமெரிக்க நாட்டவருக்கு இழப்பீட்டை எவ்வாறு வெற்றிகரமாகப் பெறுவது என ChatGPT உதவியுள்ளது.
கொலம்பியாவுக்குப் பயணம் செய்வதனை நிறுத்திய அமெரிக்கரின் 2,500 டொலருக்கும் அதிகமான தொகையை மீட்டெடுக்க ChatGPT உதவியுள்ளது.
கொலம்பியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்ட நபர் அவருடைய விடுமுறையை ரத்து செய்ய வேண்டியிருந்தது.
குறித்த நபரால் விமான நுழைவுச்சீட்டுக்கும் ஹோட்டலுக்கும் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. எவ்வாறு பணத்தைத் திரும்பிப் பெற முடியும் என்று திண்டாடிய அவர் ChatGPT உதவியுள்ளது.
ChatGPT வரைந்து தந்த கடிதத்தை வைத்து அவர் இழப்பீடு கோரியுள்ளார். விமான நிறுவனமும் ஹோட்டலும் அவருக்கு இழப்பீடு வழங்கச் சம்மதித்தன.
இதனால் அவருக்கு 2,500 டொலர் இழப்பீடு கிடைத்ததாக தெரியவந்துள்ளது