இயக்குனர் “விக்ரம் சுகுமாரன்” திடீர் மரணம்

மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் போன்ற திரைப்படங்களின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் பேருந்தில் பயணிக்கும்போது மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளார்.

விக்ரம் சுகுமாரன் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவருக்கு கதையினை கூறிவிட்டு சென்னைக்கு வருகின்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ” ஆடுகளம்” திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு துணை இயக்குனராக பணியாற்றியதோடு வசனங்களை எழுவதற்கும் துணைநின்றவர். அதேநேரம் “பொல்லாதவன்”, “கோடி வீரன்” திரைப்படங்களில் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியவர்.

இவருடைய திடீர் மரணச்செய்தி திரையுலகை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *