டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண முடியாத நிலையில் இலங்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்துகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தற்போது பரவிவரும் வைரஸ் தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.