Transforming Sri Lanka’s plastic recycling industry requires bold leadership and collaboration. GP Certified has partnered with pioneering recyclers and FMCG brands who are championing the certification process through pilot programs. These early adopters – “Champions of Change” – are setting the foundation for the country’s transition to a more sustainable and profitable plastic waste management…
டெல்மேஜ் மற்றும் Shell Lubricants இணைந்து முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையை கொழும்பில் கொண்டாடின

இலங்கையின் நம்பிக்கையை வென்ற பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக டெல்மேஜ், உலகப் புகழ்பெற்ற வலு வர்த்தக நாமமான Shell உடன் கொண்டுள்ள பங்காண்மையின் மைல்கல் பூர்த்தியை குறிக்கும் வகையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் விசேட நிகழ்வொன்றை 2025 ஜுன் 11 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் Shell மற்றும் டெல்மேஜ் ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு, இந்த பங்காண்மையின் பலமான வெளிப்பாட்டையும், இலங்கையில் lubricants தீர்வுகளின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றமை பற்றியும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிகழ்வின் போது, இலங்கையில் Shell Lubricants இன் அங்கீகாரம் பெற்ற விநியோகத்தராக Delmege Forsyth Energy நியமிக்கப்பட்டிருந்தமை கொண்டாடப்பட்டிருந்தது. Shell Lubricant இன் சர்வதேச தலைமைத்துவ நிலையை பயன்படுத்தி உலகத் தரம் வாய்ந்த lubrication தீர்வுகளை டெல்மேஜின் பரந்த விநியோக வலையமைப்பினூடாக இலங்கையில் விநியோகிப்பதற்கு இந்த பங்காண்மை வழிகோலும்.
நிகழ்வில் பங்கேற்றிருந்த விசேட விருந்தினர்களில் Shell Lubricant Asia-Pacific தலைமைத்துவ அணியினர் மற்றும் டெல்மேஜ் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் அடங்கியிருந்தனர். அத்துடன், இலங்கையின் மோட்டார் விளையாட்டு பிரபலங்கள் மற்றும் உத்தியோகபூர்வ Shell வர்த்தக நாம தூதுவர்களான புகழ்பெற்ற கார் பந்தய சம்பியனான அஷான் சில்வா, மற்றும் முன்னணி மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஜாக்ஸ் குணவர்தன ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அதனூடாக, சிறப்புக்கான டெல்மேஜின் அர்ப்பணிப்பு மீளுறுதி செய்யப்பட்டிருந்தது.
மூலோபாய வியாபார அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் அம்ரித் அதிஹெட்டி கருத்துத் தெரிவிக்கையில்: “Shell உடனான எமது பங்காண்மை என்பது வியாபார மைல்கல் என்பதற்கு அப்பாற்பட்டது – புத்தாக்கம், தங்கியிருக்கும் திறன் மற்றும் நீண்ட கால வளர்ச்சி ஆகியவற்றுக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது. ஒன்றிணைந்து, இலங்கையில் கிடைக்கும் வலுத் தீர்வுகளின் நியமங்களை மேம்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
Shell Lubricant Macro Distributor Asia Pacific திரு. ஜோனாஸ் சர்மியென்டோ ஆசியா வணிக மேலாளர், “இலங்கையில் நீண்ட காலமாக செயலாற்றி வரும் டெல்மேஜ் உடன் Shell கைகோர்ப்பதையிட்டு மிகவும் பெருமை கொள்கிறது. இலங்கை சந்தையில் எமது உயர் வினைத்திறன் வாய்ந்த lubricant தீர்வுகளை நுகர்வோர் மற்றும் வியாபாரங்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் இந்த அறிமுகம் முக்கியத்துவம் வாய்ந்த படியாக அமைந்துள்ளது. இந்த கைகோர்ப்பினூடாக எமது பிரசன்னம் மேம்படுத்தப்படுவது மாத்திரமன்றி, நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிற்துறைகளுக்கு புதிய பெறுமதியையும் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
Vallibel One PLC இன் முகாமைத்துவ பணிப்பாளர் தினுஷா பாஸ்கரன் இந்த பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்: “டெல்மேஜ் மற்றும் Shell இடையிலான இந்த பங்காண்மையினூடாக, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களை இலங்கை சந்தையில் அறிமுகம் செய்வதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தொழிற்துறைகளை மேம்படுத்தும் மற்றும் தேசிய முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நீண்ட கால பங்காண்மைகளை கட்டியெழுப்புவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். டெல்மேஜ் ஊடாக Shell’உடன்பிரவேசிப்பதன் மூலம், இந்த நோக்கம் நிறைவேறுவதற்கான பலம் வாய்ந்த உதாரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
இந்த நிகழ்வின் போது, Shell’இன் சர்வதேச தலைமைத்துவ நிலை (18 ஆண்டுகளாக முன்னிலையில்) (1) மற்றும் முன்னணி மற்றும் மாறுபட்ட தயாரிப்புகளினூடாக கிடைக்கும் போட்டிகரமான அனுகூலம், டெல்மேஜின் அனுபவம் மற்றும் சேவைச் சிறப்பு போன்றவற்றினூடாக வழங்கப்படுவது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.