Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
கல்வியில் புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் Melbourne நகரத்தில் CBD வளாகத்தை அறிமுகப்படுத்தும் Federation University
Melbourne நகர மையத்தில் CBD (Central Business District) வளாகத்தை நிறுவுவதன் மூலம் Federation University Australia தனது கல்வி தொடர்பான திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய City Centre Campus வளாகம், சர்வதேச மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களுடன் இணைவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது Melbourne நகரின் கல்வியியலாளர்கள் மற்றும் தொழில்முறையாளர் சமூகத்துடன் பல்கலைக்கழகத்தின் இருப்பை வலுப்படுத்துவதுடன், கல்வியில் புத்தாக்கத்தை முன்னெடுத்து வருவதை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.
இந்த புதிய Melbourne வளாகத்தை அறிமுகப்படுத்தியமை தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த அவுஸ்திரேலியாவின் Federation University தலைவரும் அதன் துணைவேந்தருமான பேராசிரியர் Duncan Bentley கருத்து வெளியிடுகையில், “இந்த CBD வளாகம், எதிர்கால தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான ஒரு மேடையாக இருந்து, மேம்பட்ட வசதிகள் மற்றும் பசுமையான மாணவர் கல்விக் கூடங்களை வழங்குவதன் மூலம், உயர் கல்விக்கான ஒரு உயர்ந்த கற்றல் சூழலை உருவாக்குகின்றது.” என்றார்.
சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய அதிநவீன வளாகம், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தி, சிறந்து விளங்குவதற்கும் சமூகத்திற்கு சேவை செய்யும் வகையிலும், வளர்ச்சி மற்றும் கல்விப் பரிமாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச மாணவர்களை வரவேற்க தற்போது தயாராகியுள்ளது. அத்துடன், தொழில்துறை பங்காளர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களுடன் இணைந்து பணிபுரிய மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறைகள், அறிவூட்டும் அமர்வுகள் மற்றும் தொடர்புகளை வலுப்படுத்தும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
Federation பல்கலைக்கழகத்தின் Melbourne வளாக விரிவாக்கத்தை பாராட்டி, Nawaloka College of Higher Studies (NCHS) இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் பிரதித் தலைவருமான Victor Ramanan, எதிர்கால மாணவர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் இந்த கூட்டாண்மை முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டார்.
NCHS கற்கைகள் பிரிவு பீடாதிபதியான Dr. Alan Robertson கருத்து வெளியிடுகையில், “Melbourne உள்ள Federation பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வியை சர்வதேசமயமாக்குவதில் NCHS பங்களிப்பு வழங்குவதுடன், மாணவர்களுக்கான கல்விப் பாதைகளை உருவாக்கியுள்ளது. இந்த CBD வளாகம், கல்வி மற்றும் சர்வதேசமயமாதலுக்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும்.” என்றார்.
இந்த முயற்சி 2025 ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு, இதில் கணக்கியல், வணிகம், இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. Melbourne நகரம் உலகின் கலாசார ரீதியாக பல்வகைத் தன்மை உடையது என்பதுடன், அவுஸ்திரேலியாவில் சிறந்த பொதுப் போக்குவரத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
Nawaloka College of Higher Studies பற்றி
Nawaloka College of Higher Studies (NCHS) என்பது Nawaloka Holdings நிறுவனத்தின் கீழுள்ள ஒரு நிறுவனமாகும். இது இலங்கையில் மாணவர்களுக்கு கட்டுப்படியான விலையில், சிறந்த உயர்கல்வியை எளிதாகக் கிடைக்கும் வகையில் வழங்கும் நோக்குடன் நிறுவப்பட்டுள்ளது.
கொழும்பின் மையத்திலும் கண்டியில் ஒரு கிளை வளாகத்துடனும் இயங்கி வரும் NCHS, இலங்கையை ஆசியாவின் ஒரு சர்வதேச கல்வி மையமாக உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வருகிறது. அது கொண்டுள்ள உலகத் தரத்திலான கற்றல் வசதிகள் நாட்டிலேயே சிறந்த கல்வியை மாணவர்கள் அனுபவிக்க வழிவகுக்கின்றன.
மேலதிக தகவல்களுக்கு: www.nchs.edu.lk
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.bh/register/person?ref=GGYHGRE