இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஈரானில் செவ்வாய்க்கிழமை இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால் செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
சோர்கேவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் உள்ள தலைநகர் தெஹ்ரானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.