இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை – வருத்தத்தில் டிரம்

தான் என்ன செய்தாலும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக விருதுகளில் மிக உயரியது நோபல் பரிசு. மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சாதனை படைத்தவர்களுக்கு இந்த நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
நோர்வே நாட்டு நோபல் குழுவினர் இந்த பணியை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுகிறது
நடப்பாண்டில், அமைதிக்கான நோபல் பரிசு பெற அதிபர் டிரம்ப் முயற்சி செய்வதாக பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, நான் என்ன செய்தாலும், ” எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” என அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே, பல ஆண்டுகளாக நடந்து வரும், வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை நான் ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ருவாண்டா மற்றும் காங்கோவின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை வாஷிங்டனில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். இது ஆப்ரிக்காவிற்கு மட்டும் அல்ல, உலகிற்கும் ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
எகிப்துக்கும், எத்தியோப்பியாவிற்கும் இடையில் அமைதியைப் பேணுவதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மக்களுக்கு நன்றாக தெரியும். எனக்கு அவ்வளவு தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.