இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
டிஜிட்டல் கற்றலை அறிமுகப்படுத்த தீர்மானம்

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.
உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார்.
உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து கல்வித்துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ,
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது உள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்தி கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைமைகளை அறிமுகப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களில், மாற்றுத்திறனாளி சமுதாயம் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் வசதிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வது அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு வலுவான, பல்துறை பணிக்குழு அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் போது பணிக்குழு அதிகாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதோடு பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.