இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக மத்திய கிழக்கு வழியாக பயணம் தடைபட்டுள்ளதாகவும், அவ்வப்போது வான்வெளி மூடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறையின் பாதுகாப்பு எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.