Sporting excellence achieved for eight consecutive years SLT-MOBITEL, the National ICT Solutions Provider, continued its remarkable sporting legacy with a standout performance at the 40th Annual Mercantile Athletics Championships 2025, bringing home the prestigious Overall Runners-Up title for the eighth year running. Competing over three action-packed days on 14th, 15th and 16th November 2025 at…
2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும்நிகழ்வில் பல தங்கப் பதக்கங்களை வெல்லும் MAS Holdings
2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும் நிகழ்வில் MAS Holdings மூன்று மதிப்புமிக்க தங்க விருதுகளைப் பெற்றுள்ளது. கொழும்பு சினமன் லைஃப்பில் ஜூன் 11-ம் திகதி நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வு, நிதி முகாமைத்துவம், நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்திறன் ஆகிய துறைகளில் நிறுவன மற்றும் தலைமைச் சிறப்புக்களைப் பாராட்டியது. இந்த நிகழ்வு, இலங்கையின் வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எழுச்சிமிக்க தொழில்துறை தலைவர்கள் மற்றும் புத்தாக்கமான நிறுவனங்களை முன்னிலைப்படுத்தியது.
MAS Holdingsஇன் குழு நிதி பணிப்பாளர் சுரத் சந்திரசேன ‘ஆண்டின் சிறந்த தலைமை நிதி அதிகாரி’ தங்க விருதைப் பெற்றுள்ளார். நிறுவனம் மேலும் இரண்டு தங்க விருதுகளைப் பெற்றுள்ளதுடன் ஆண்டின் ESG/நிலைத்தன்மை சாம்பியன் – தங்கம், ஆண்டின் DEI சாம்பியன் – தங்கம் இந்த விருதுகள், பொறுப்பான வணிகத்தின் முக்கிய துறைகளில் MASஇன் தலைமைத்துவத்தை பிரதிபலிக்கின்றன. மேலும், அசங்க சமரசேகர ‘ஆண்டின் வணிக முகாமையாளருக்கான’ வெண்கல விருதைப் பெற்றுள்ளார்.

MAS நிறுவனத்தில் 15 ஆண்டுகாலப் பணியில், சுரத் பல்வேறு வணிகப் பிரிவுகளில் தலைமைப் பணிகளை ஏற்று, நிதி மற்றும் மூலோபாய மாற்றங்களுக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். MAS Intimatesஇல் நிதிக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் Bodylineஇல் நிதி, மூலோபாய, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை பணிப்பாளராக இருந்தபோது ஒரு பெரிய திருப்பத்தை வெற்றிகரமாக நடத்தினார். தற்போது, Chartered Institute for Management Accountants நிறுவனமான CIMA வில் விரிவுரையாளராகவும் பணியாற்றி, எதிர்கால நிதித் துறை நிபுணர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்.
இந்த விருதுகள் MAS நிறுவனத்தின் வலுவான நிதி ஆளுமை மட்டுமல்லாமல், நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தன்மை கலாச்சாரத்தை உருவாக்கும் நீண்டகால அர்ப்பணிப்பு உள்ளிட்ட நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளை பிரதிபலிக்கின்றன. MASஇன் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் “MAS Plan for Change” எனப்படும் நிலைத்தன்மை உத்தியில் விவரிக்கப்பட்டுள்ளன: அவையாவன தயாரிப்பு: நிலைத்தன்மைக்கான புத்தாக்கமான தயாரிப்புகள், வாழ்க்கை முறைகள்: பெண்களுக்கு அதிகாரம் மற்றும் அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை வழங்குதல், கிரகம்: நிலைத்தன்மைக்கான செயல்பாடுகள் மற்றும் சமூக மேம்பாடுகள் ஆகியன அடங்கும். ESG மற்றும் DEI துறைகளில் இந்த அங்கீகாரங்கள், நிலைத்தன்மைக்கான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள், பெண்கள் மேம்பாடு, திறமையான வேலைவாய்ப்புகள் மற்றும் நிலைத்தன்மைக்கான சமூக முன்னேற்றம் போன்ற முக்கிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பிரதிபலிக்கின்றன.

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறிமுகமாகிய Pinnacle விருது வழங்கும் நிகழ்வில் இந்த வெற்றிகள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை, இலங்கையின் வணிக மற்றும் நிதிச் சமூகத்திற்கான சிறந்த தரத்திற்கான புதிய அளவுகோலாக இவை அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.


