Transforming Sri Lanka’s plastic recycling industry requires bold leadership and collaboration. GP Certified has partnered with pioneering recyclers and FMCG brands who are championing the certification process through pilot programs. These early adopters – “Champions of Change” – are setting the foundation for the country’s transition to a more sustainable and profitable plastic waste management…
உலக சமுத்திர தினத்தையொட்டி கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ராஜா ஜுவலர்ஸ்

இலங்கையில் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ் (Raja Jewellers), சமூக நலனுக்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, அண்மையில் பாணந்துறையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. உலக சமுத்திர தினத்தினை (World Ocean Day) நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக நிறுவனத்தின் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட வலுவான செயன்முறை ரீதியான, உறுதியான பங்களிப்பை பிரதிபலிக்கிறது.
இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையின் முழுப் பொறுப்பையும் ராஜா ஜுவலர்ஸின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் ஏற்றனர். சமூகத்திற்கும், தம்மை வாழவைக்கும் இயற்கைக்கும் திருப்பிக் கொடுக்க வேண்டிய பொறுப்பை உணர்த்தும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட கடலை மாசுபடுத்தும் அதிகரித்து வரும் பிரச்சினைகளுக்கு எதிராக அவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தன.
இந்த முயற்சியை தொடர்பில் ராஜா ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அத்துல எலியபுர கருத்துத் தெரிவிக்கையில், “சூழல் பாதுகாப்பு என்பது இன்று ஒரு தெரிவு அல்ல, அது ஒரு கட்டாயமான விடயமாகும். நம்பிக்கைக்குரிய மற்றும் பொறுப்பான ஒரு இலங்கை வர்த்தகநாமம் எனும் வகையில், உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு இந்த செயற்பாட்டை முன்னெடுத்தமை தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். நிலைபேறான தன்மை என்பது செயற்பாட்டில் ஆரம்பிக்கிறது என நாம் நம்புகிறோம். இந்த முயற்சியானது, இயற்கை வளங்களையும், கடற்கரை வளங்களையும் ஏனையவர்களும் ஒன்றிணைந்து பாதுகாக்கத் தூண்டும் என நாம் நம்புகிறோம். எமது குழுவின் உறுதியான செயற்பாடுகள் எமது மதிப்புகளை பிரதிபலிக்கின்றன.” என்றார்.
இந்த நடவடிக்கையில் 100 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றதன் மூலம், கடற்கரை பகுதியில் இருந்து பாரிய அளவிலான கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த முயற்சியின் போது மொத்தம் 203 கிலோ பிளாஸ்டிக், 166 கிலோ தகரம், அலுமினியம் மற்றும் கேன்கள், 17 கிலோ கண்ணாடி, 6 கிலோ துணி மற்றும் 12 கிலோ அட்டைப் பெட்டிகள் சேகரிக்கப்பட்டன. கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இது ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயற்பாடு மட்டுமல்லாது, ஒருங்கிணைந்த நோக்குடனான குழு ஒருமைப்பாட்டை கொண்ட ஒரு பகிரப்பட்ட நோக்கத்தை கொண்ட செயற்பாடாகவும் அமைந்தது. இது தொடர்பில் பொதுமக்களை ஆர்வமூட்டும் வகையில், இந்த செயற்பாடுகள் அனைத்தும் வீடியோ தொடர் வடிவமாக ராஜா ஜுவலர்ஸின் Facebook, Instagram, LinkedIn, YouTube சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இது, ராஜா ஜுவலர்ஸின் வருடாந்த பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) நிகழ்வுகளில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். பாணந்துறை கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையானது, சமூக நலனிற்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் நிறுவனம் பங்களிக்கும் நம்பகமான பங்கு மற்றும் கட்டமைப்பை மீண்டும் உறுதி செய்கிறது. சிறந்த நகை உற்பத்தியாளராகவும் பொறுப்புள்ள நிறுவனமாகவும் தன்னை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ராஜா ஜுவலர்ஸ் இலங்கையை மேலும் சுத்தமாகவும் பசுமையாகவும் மாற்றும் நோக்கில் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.

96 வருட பாரம்பரியத்தைக் கொண்ட ராஜா ஜுவலர்ஸ், இலங்கையின் பல தலைமுறையினரின் நம்பிக்கையைப் பெற்று வருகின்ற நிறுவனமாகும். எக்காலத்திலும் அழிவில்லாத மதிப்பை தரும் தனிப்பட்ட மற்றும் கைவினைத்திறன் மிக்க நகைகள், வைரங்கள், பெறுமதி வாய்ந்த உலோகங்கள், இரத்தினங்கள், சிர்கோன்கள், சுத்திரிக்கப்பட்ட தங்கம் போன்ற உயர் தரப் பொருட்களை ராஜா ஜுவலர்ஸ் வழங்கி வருகிறது.
இவை தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, www.rajajewellers.com இணையத்தளத்திற்கு விஜயம் செய்வதோடு, அதன் Facebook பக்கம் https://www.facebook.com/Rajajewellers.lk/ மற்றும் Instagram பக்கத்தை https://www.instagram.com/rajajewellers.lk தொடருங்கள்