65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காற்றின் தரக்குறியீட்டில் மாற்றம்.
கடந்த சில நாட்களாக நிலவிய காற்றின் தரக்குறியீட்டில் ஏற்பட்ட எச்சரிக்கை மாற்றம் தற்பொழுது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய நகரங்களில் சற்று மோசமாக காற்றின் தரம் நிலவுவதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உணர்திறன் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


