இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
இலங்கையின் அதிகரித்துச் செல்லும் எலும்பு நோய் பராமரிப்பு தொடர்பில் வைத்தியர். குர்பால்சிங்விளக்கம்

புகழ்பெற்ற எலும்பியல் நிபுணர் வைத்தியர். குர்பால் சிங் சமீபத்தில் Hatton National Bank (HNB) உடன் இணைந்து IHH Healthcare சிங்கப்பூரின் இலங்கை அலுவலகத்தால் நடாத்தப்படும் நோயாளிகளுக்கான கல்வி அமர்வு நிகழ்ச்சித்திட்டத்தினை நிறைவு செய்தார். இந்த கூட்டுத் திட்டம், நோயாளிகள் மற்றும் சமூகத்திற்கு எலும்பியல் சுகாதாரம், சிகிச்சை விருப்பங்கள் மற்றும் நோயாளி பராமரிப்பில் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஆரம்பகால தலையீடு மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,வைத்தியர் குர்பால் சிங் அவர்கள், நீர்கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து, பங்கேற்றவர்களுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி, எலும்பியல் சிகிச்சைகளில் பின்பற்றப்படும் நவீன முறைகள், ரொபோ உதவியுடன் முன்னெடுக்கப்படும் மூட்டு மாற்று சத்திரசிகிச்சைகள், குறைந்த அளவு துளையிடலுடனான சத்திர சிகிச்சைகள், பின்புற வலி சிகிச்சைகள் போன்றவை படங்களின் வழிகாட்டல் உதவியுடனான ஊசியிடல் மற்றும் நோயாளரை மையப்படுத்திய சிகிச்சை வழிமுறைகள் போன்றன தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார்.


IHH Patient Assistant center Singapore கொழும்பு அலுவலகத்தின் இலங்கைக்கான உயரதிகாரி ஷுவோ ரிதயேஷ் கருத்துத் தெரிவிக்கையில், “musculoskeletal நிலைகள் மற்றும் நீண்ட கால எலும்புப் பிரச்சனைகள் போன்றன அடங்கலாக தொற்றா நோய்களின் தாக்கத்தினால் இலங்கை பெருமைளவு சுமையை அனுபவிக்கும் நிலையில், வைத்தியர். சிங் அவர்களின் அமர்வுகளினூடாக, இது போன்ற சவால்களை சமாளிக்கக்கூடிய வகையில் சர்வதேச சுகாதார கட்டமைப்புகள் எவ்வாறு தம்மை மேம்படுத்தியுள்ளன என்பது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.” என்றார்.
வைத்தியர் குர்பால் சிங் விளக்கமளிக்கையில், மேம்படுத்தப்பட்ட சிகிச்சை தெரிவுகள், குறைவான வலி மற்றும் குறைந்தளவு துளையிடல் வழிமுறைகளில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், தகவலறிந்த தீர்மானமெடுத்தலினூடாக பராமரிப்பை பெற்றுக் கொள்வதில் பெருமளவு நம்பிக்கையை வெளிப்படுத்தல் மற்றும் ஆரம்பத்தில் அறிகுறிகளை புரிந்து கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் பற்றியும் விளக்கங்களை வழங்கியிருந்தார்.
வைத்தியர். சிங் குறிப்பிடுகையில், “இன்றைய சுகாதார பராமரிப்பு என்பது, நோயாளர்களுக்கு தகவலூட்டுவதனூடாக கட்டியெழுப்பப்பட வேண்டும். தனிநபர்கள் தமது நிலையையும், காணப்படும் சிகிச்சை தெரிவுகளையும் புரிந்து வைத்திருந்தால், அவர்களின் சுகாதாரத்தின் கட்டுப்பாட்டை அவர்கள் பொறுப்பேற்பதுடன், அந்த நிலையில் அசல் மாற்றம் நிகழ்கிறது.” என்றார்.

IHH Healthcare மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியன இணைந்து, இலங்கையின் சமூகங்களுக்கு சுகாதார கல்வியறிவூட்டல், புத்தாக்கம் மற்றும் சர்வதேச கைகோர்ப்புகள் போன்றவற்றினூடாக வலுவூட்டும் செயற்பாடுகளின் அங்கமாக இது அமைந்துள்ளது. மூட்டு வலி அல்லது எலும்புசார் சவால்களுக்கு முகங்கொடுக்கும் எவருக்கும், இது போன்ற முயற்சிகளினூடாக அவசியமான அறிவூட்டப்படுவது மாத்திரமன்றி, ஆரோக்கியமான மற்றும் செயற்திறனான வாழ்க்கையை கொண்டிருப்பதற்கும் வழிகோலப்படும்.
IHH Healthcare Singapore பற்றி
உலகின் மாபெரும் தனியார் சுகாதாரக் குழுக்களில் ஒன்றான IHH Healthcare Berhad இன் ஒரு பகுதியாக இருக்கும் IHH Healthcare சிங்கப்பூர், அதன் புகழ்பெற்ற மருத்துவமனைகளான Mount Elizabeth, Mount Elizabeth Novena, Gleneagles, Parkway East மற்றும் Parkway Cancer Centre மூலம் செயல்படுகிறது. ஒன்றாக, அவை இருதயவியல், புற்றுநோயியல், நரம்பியல், எலும்பியல், இரைப்பை குடல், பெண்கள் சுகாதாரம் மற்றும் குழந்தை மருத்துவம் போன்ற சிறப்புப் பிரிவுகளில் உலகத் தரம் வாய்ந்த மூன்றாம் நிலை பராமரிப்பை வழங்குகின்றன, ரோபோடிக் அறுவை சிகிச்சை, மாற்று அறுவை சிகிச்சை திட்டங்கள் மற்றும் விரிவான புற்றுநோய் பராமரிப்பு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படுகின்றன. இலங்கை, பங்களாதேஷ், மியான்மர் மற்றும் அதற்கு அப்பால் அர்ப்பணிப்புள்ள சர்வதேச நோயாளர் சேவைகளுடன், IHH சிங்கப்பூர் மருத்துவ சிறப்பின் ஒரு பிராந்திய மையமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அத்துடன், நம்பகமான, சிறப்பு மற்றும் இரக்கமுள்ள சுகாதாரப் பராமரிப்பிற்காக உலகளவில் நோயாளிகளை ஈர்த்த வண்ணமுள்ளது.