நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இரு வாரங்களில் 16000இற்கும் மேற்பட்டோர் கைது!
நாடு முழுவதும் ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது 16 ஆயிரத்து 738 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பில் நாடளாவிய ரீதியில் 16 ஆயிரத்து 915 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 110 கிலோ 556 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 600 கிலோ 947 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 10 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 458 கிலோ 216 கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

