நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு இன்று தங்காலையில்
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு, இன்று (20) பிற்பகல் 3.00 மணிக்கு தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.
இந்நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒக்டோபர் 30 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

