Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
மக்களின் மனதை வென்ற கலைஞர் மறைந்தார்.
இலங்கையின் பிரபல கானா பாடகர் “நவகம்புர கணேஷ்” உடல்நலக்குறைவால் இன்று(29 11 2025) மாலை காலமானார்.
தன்னுடைய உத்வேகமான குரலாலும், வித்தியாசமான சிகையலங்காரம், ஆடை அணிகலன்களாலும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் “நவகம்புர கணேஷ்”.
பல மொழிகளில் மிக லாபகமாக பாடல்களை பாடி ரசிகர்களை ஆடவைத்து மகிழ்ச்சிப்படுத்தி அழகுபார்ப்பார். குறிப்பாக இவர் பாடும் கானா பாடல்களுக்கும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாடல்களின் வரிகளை நகைச்சுவையாக கோர்த்து பாடும் அழகிற்கும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் அதிகம்.
“மட்டக்குழியில கட்ட கவுனோட” என்ற பாடலை படாமல் இவர் மேடையில் இருந்து இறங்கியதும் இல்லை, இவரை அந்த பாடலை பட வைக்காமல் மேடையில் இருந்து இறங்க ரசிகர்கள் விடுவதுமில்லை.
என்றும் மனதளவிலும்,உடலளவிலும் இளமையாக, உத்வேகமாக வலம்வந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாபெரும் கலைஞர் நிரந்த துயிலில் இன்று.
இவரது ஆத்மா சாந்தியடைய நாம் பிராத்திப்போம்.