Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
தடைப்பட்ட தொலைபேசி, இணையத் தொடர்பு இன்று முழுமையாக மீட்கப்படும் – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்
அனர்த்தம் காரணமாக தடைப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்புகள் வியாழக்கிழமை (04) முழுமையாக மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்கா வீரரத்ன தெரிவித்துள்ளார்.
சேவைகளை மீட்டெடுக்க டிஜிட்டல் பொருளாதாரம் அமைச்சு, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் அயராது உழைத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, மாகாண பைபர் இணைப்புகள் 11 இடங்களில் தடைப்பட்டன. அமைச்சின் நேரடித் தலையீட்டின் மூலம், அவற்றில் 9 இடங்களில் 24 மணி நேரத்திற்குள் சேவைகளை மீட்டெடுக்க முடிந்தது. தற்போது, அனைத்து மாகாண இணைப்புகளும் செயல்பாட்டில் உள்ளன, தொலைத்தொடர்பு சேவைகளின் தொடர்ச்சியை உறுதிசெய்கின்றன.
இடைநிலை மையங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில், மாற்று பைபர் பாதைகள் மூலம் சமிக்கைகள் நிர்வகிக்கப்படுகின்றன. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட மின் தடைகள் மற்றும் பைபர் துண்டிப்புகள் காரணமாக 4,000 க்கும் மேற்பட்ட பிரதான பரிமாற்ற கோபுரங்கள் செயலிழந்தன. இவற்றில், சுமார் 2,800 தற்போது மீட்கப்பட்டுள்ளன.
எஞ்சிய 949 கோபுரங்கள் முக்கியமாக மின்வெட்டு காரணமாக செயலிழந்துள்ளன. இவற்றை விரைவில் மீட்டெடுக்க தொலைத்தொடர்பு வழங்குநர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர்.
தொலைத்தொடர்பு கோபுரங்களை விரைவாக அடைவதற்கும் தேவையான மின் ஆதரவை வழங்குவதற்கும் முப்படையினர் அதிகபட்ச உதவிகளை வழங்குகின்றனர்.
நவம்பர் 28ஆம் திகதி அனர்த்தம் ஏற்பட்டபோது பொதுமக்கள் மொபைல் வலையமைப்புகளுடன் இணைவதில் ஆரம்பத்தில் சிரமங்களை எதிர்கொண்டாலும், குறுஞ்செய்தி திறனை செயல்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை நாம் தயார் செய்தோம். இருப்பினும், நவம்பர் 29ஆம் திகதிக்குள் கணிசமான பைபர் இணைப்புகள் மீட்கப்பட்டதால், இந்தத் தேவை ஏற்படவில்லை.
தற்போது, நுவரெலியா, பதுளை, புத்தளம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பிரதானமாக சிக்கல்கள் நீடிக்கின்றன. அவற்றில், நுவரெலியா மற்றும் கண்டி ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
நாளைய தினத்திற்குள், நுவரெலியா மற்றும் புத்தளத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான இணைப்பு மீட்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல், கண்டியில் தற்போதுள்ள 65 சதவீதத்திலிருந்து சுமார் 70 சதவீதமாக மீட்டெடுப்பை அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம்.
பொதுமக்கள் தகவல்களைப் பெறுவதற்கும், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பைப் பேணுவதற்கும் தொடர்பு அத்தியாவசியமானது. நாங்கள் ஏற்கனவே 80 சதவீதத்துக்கும் அதிகமான துண்டிப்புகளைத் தீர்த்துவிட்டோம். நாளைக்குள் முழுமையாக மீட்டெடுப்பை அடைய முடியும் என்று நாம் நம்புகிறோம்.
Hey, have you guys heard about luk8? I just saw it. I gotta say it looks awesome! Totally digging the vibe. luk8