65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாலர் பாடசாலைகளையும் திறப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கக்கூடிய நிலையில் இருப்பின், டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட, தற்போது பாதுகாப்புடன் செயற்படக்கூடிய நிலையில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவின் ஊடாக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் விடுத்துள்ளது.


Just did the phwinslotlogin. Easy to register, but like they say, be careful when you bet. I mean, it’s exciting, but don’t bet the house, okay?