கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
கிளிநொச்சியில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள தேங்காய் உற்பத்தி
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தென்னை செய்கையில் பெறப்படும் தேங்காயின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதனால் தென்னை செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் வெண் ஈ தாக்கம் காரணமாக பல தடவைகள் மருந்துகள் தெளிக்கப்பட்டிருந்த போதிலும் பிரயோசனமற்ற நிலையில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.