நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மின்னஞ்சல் ஊடாக வந்த அச்சுறுத்தல் ; பதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தில் பதற்றம்!
பதுளை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மின்னஞ்சல் இன்று புதன்கிழமை (14) காலை 09.24 மணியளவில் பதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மின்னஞ்சலில் பதுளை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பில் பதுளை பொலிஸ் தலைமையகம் மற்றும் கொழும்பு தொழில் திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

