65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நஞ்சுகள், அபின், அபாயகரமான ஔடதங்கள் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் பேச்சு
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது.
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக ஆழ்கடலில் அபாயகரமான ஔடத கடத்தல்கள் மற்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்குத் தற்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்த இரண்டு சட்டமூலங்கள் குறித்தும் நீண்டநேரம் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், குழு உறுப்பினர்கள் இச்சட்டமூலங்களில் சேர்க்கப்பட வேண்டிய பல திருத்தங்களை முன்மொழிந்தனர்.
இது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு அமைய, எதிர்காலத்தில் குழு கூடி இந்த விடயத்தை மீண்டும் மதிப்பாய்வு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
அதேநேரம், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் அறிக்கை தாமதமைடைவது, eZ-cash மற்றும் mCash ஆகியன போதைப்பொருள் கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்படுவது குறித்து குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், இவை தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.


Alright, so I stumbled upon 5699casino the other day. It’s got a decent selection of games. Not the flashiest site ever, but it gets the job done if you’re just looking to unwind and maybe win a few bucks! Give it a shot: 5699casino
Hey all! 5699vin is on my radar now. Seems like a good place to unwind! Check it out and see what you think! Here’s the link with benefits: 5699vin
If you’re looking for games, try gamesx66. It’s got a nice selection. The graphics are pretty good and load times are fast! gamesx66