Janashakthi Finance PLC, a subsidiary of JXG, has introduced “Shakthi”, a dedicated fixed deposit product for women, reinforcing its commitment to inclusive finance and long-term wealth creation. Designed for today’s woman, “Shakthi” goes beyond a traditional Fixed Deposit. It is built to support women at every stage of life from starting a career to growing…
MCA F பிரிவு ரி20 லீக் சுற்றுப்போட்டி 2026
MCA F பிரிவு ரி20 லீக் சுற்றுப்போட்டி 2026க்கு Fairfirst Insurance Limited 8ஆவது தொடர்ச்சியான வருடமாக அனுசரணை வழங்குவதன் மூலம் வர்த்தக கிரிக்கெட் சங்கத்துக்கான அதன் ஆதரவு தொடர்கிறது.
இந்தப் போட்டியில் 24 அணிகள் 4 குழுக்களில் போட்டியிட்டன.
ஏ குழு
1. சொஃப்ட்லொஜிக் லைஃப் இன்சூரன்ஸ்
2. PABC
3. மெட்ரோபொலிட்டன் குழுமம்
4. எய்ட்கன் ஸ்பென்ஸ்
5. எஸ்ட்ரொன் லிமிட்டெட்
6. மெக்லெரன்ஸ் குழுமம்
பி குழு
1. எமர்கெமி NB
2. பி. ஹனாத் பிளான்டேஷன் ‘பி’
3. சிலோன் டுபேக்கோ
4. ரன்பத் குழுமம்
5. அன்சல் டெக்ஸ்டைல்
6. SAGT
சி குழு
1. கொமர்ஷல் வங்கி
2. கெமரா LK
3. சியாம் சிட்டி சிமென்ட்
4. அன்செல் லங்கா
5. எம்பயர் டீ
6. MAS எக்டிவ் பியகம
டி குழு
1. கொமர்ஷல் கிரெடிட்
2. அட்டயர் குழுமம்
3. HNB அஷுவரன்ஸ்
4. காமா பிஸ்ஸா கிராஃப்ட்
5. ஈ பி க்றீசி
6. சிட்ரெக் குழுமம்
போட்டி அமைப்பு
போட்டி இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது
1. லீக் நிலை: 60 ரி20 போட்டிகளைக் கொண்டது. ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமான லீக் சுற்று பெப்ரவரி 15ஆம் திகதி நிறைவடைந்தது.
2. நொக் அவுட் நிலை: இறுதிப் போட்டி உட்பட 15 போட்டிகளைக் கொண்டது.
முன்னோடி கால் இறுதிப் போட்டிகள்: பெப்ரவரி 21
கால் இறுதிப் போட்டிகள்: பெப்ரவரி 28
அரை இறுதிப் போட்டிகள்: மார்ச் 07
இறுதிப் போட்டி: மார்ச் 14
புதிய அமுலாக்கங்கள்
1. ரி20 வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
2. அனைத்து போட்டிகளும் நேரடி ஒளிபரப்புகள்
3. வெள்ளை பந்து அறிமுகம்
4. அரை இறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் புற்தரை ஆடுகளத்தில் நடைபெறும். இறுதிப் போட்டி மின்னொளியில் நடைபெறும்
வீரர் கட்டுப்பாட்டு குழு (PCT)
• அனைத்து போட்டிகளும் MCA இனால் நியமிக்கப்பட்ட போட்டி தீர்ப்பாளரால் மேற்பார்வை செய்யப்படுகிறது.
• இலங்கை கிரிக்கெட் மத்தியஸ்தர்கள் சங்கத்தால் (ACU) கள மத்தியஸ்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
• இலங்கை கிரிக்கெட் எண்ணிக்கை பதிவாளர்களால் எண்ணிக்கை பலகை மற்றும் DLS முறைமை பதிவாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
போட்டி பந்து
இறுதிப் போட்டி வரை அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட GOC லீக் வெள்ளைப் பந்தைக் கொண்டு விளையாடப்படும், அப் பந்துகளில் MCA இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கும். அவை குறிப்பிட்ட விலையில் அணிகளுக்கு வழங்கப்படும்.
விசேட விருதுகள்
• சிறந்த துடுப்பாட்ட வீரர்
• சிறந்த பந்துவீச்சாளர்
• தொடர் நாயகன்
• இறுதிப் போட்டி நாயகன்
முந்தைய இறுதிப் போட்டி
MCA மைதானத்தில் கடந்த வருடம் மே 3ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் டயலொக் ஆசிஆட்டா அணியை 34 ஓட்டங்களால் வெற்றிகொண்ட HNB பி அணி சம்பியனாகி இருந்தது.
அனுசரணை வழங்கும் நிகழ்வு
இப போட்டி தொடர்பான ஊடக மாநாடும் உத்தியோகபூர்வ அனுசரணை வழங்கும் நிகழ்வும் MCA லெஜென்ட்ஸ் விங் கேட்போர் கூடத்தில் 2026 பெப்ரவரி 27ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
இப் போட்டிக்கான அனுசரணையை வர்த்தக கிரிக்கெட் சங்கத் (MCA) தலைவர் சிரோஷ குணதிலக்கவிடம் பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவிசங்கர் விக்னேஸ்வரன் வழங்கினார்.
இந் நிகழ்வில் பெயார்பெர்ஸ்ட் டிஜிட்டல், சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ தலைமை அதிகாரி கிளெமன்ட் பெர்னாண்டோபுள்ளே, MCA பொதுச் செயலாளர் அச்சின்த ஹேவாநாயக்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வர்த்தக கிரிக்கெட் சங்கம்
டிரோன் பெரேரா
27-02-2026
