Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
2026 மார்ச் முதல் நவீன தொழில்நுட்பத்துடனான புதிய குளிர்சாதனப் பெட்டிகளையும், குளிரூட்டிகளையும் அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka
வலுசக்தி சேமிப்பு, ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் அன்றாட பாவனைக்கு ஏற்ற வசதிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், Samsung Sri Lanka நிறுவனம் 2026 மார்ச் முதலாம் திகதி முதல் தனது புதிய வீட்டு உபகரணங்களை உள்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன இலங்கை குடும்பங்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வரிசையில், இரண்டு நவீன ‘ ‘டபுள் டோர் இன்வெர்ட்டர் நோ-ப்ரோஸ்ட்’ (Double Door Inverter No Frost) குளிர்சாதனப் பெட்டிகளும், ஒரு ‘ட்வின் இன்வெர்ட்டர்’ (Twin Inverter) குளிரூட்டியும் உள்ளடங்கியுள்ளன.
புதிய குளிர்சாதனப் பெட்டி மாதிரிகள், அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான நவீன வசதிகளை வழங்குவதோடு, சீரான குளிர்ச்சித் திறனை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. Samsung நிறுவனத்தின் ‘டிஜிட்டல் இன்வெர்ட்டர்’ (Digital Inverter) தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த இரண்டு மாதிரிகளும், தேவைக்கேற்ப குளிர்ச்சித் திறனைத் தானாகவே மாற்றியமைப்பதன் மூலம் மின் நுகர்வைக் குறைப்பதுடன், நீண்ட கால நீடித்துழைப்பையும் உறுதி செய்கின்றன. இதில் உள்ள ‘நோ ஃப்ரோஸ்ட்’ (No Frost) தொழில்நுட்பம் ஐஸ் கட்டிகள் உருவாவதைத் தடுப்பதுடன், ‘ஆல் ரவுண்ட் கூலிங்’ (All Round Cooling) வசதி பெட்டியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான குளிர்ச்சியைப் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்கிறது.
253 லீற்றர் கொள்ளளவு கொண்ட RT40H28WNQIG மாதிரியானது, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குடும்பங்களைக் கருத்திற்கொண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பொருட்களை இலகுவாக கையாளுவதற்கு வசதியாக ‘ஈஸி ஸ்லைட் ஷெல்ஃப்’ (Easy Slide Shelf) மற்றும் மிகக் குறைந்த முயற்சியுடன் ஐஸ் கட்டிகளைத் தயாரித்து சேமிக்க உதவும் ‘டிவிஸ்ட் ஐஸ் மேக்கர்’ (Twist Ice Maker) ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாதிரி 159,999 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கூடுதல் சேமிப்பு வசதிகளை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்காக, 275 லீற்றர் கொள்ளளவு கொண்ட RT40H28WNQIG மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாதிரியில் உள்ள அதே அடிப்படை குளிர்ச்சி தொழில்நுட்பங்களுடன், இந்த மாதிரி மேம்பட்ட இடவசதி முகாமைத்துவத்தையும், நவீன நேர்த்தியான வடிவமைப்பையும் வழங்குகிறது. இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 189,999 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதனப் பெட்டிகளுக்கு மேலதிகமாக, Samsung Sri Lanka நிறுவனம் தனது வீட்டு உபயோக ஏர் கண்டிஷனர் (Residential Air Conditioning) தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தும் நோக்கில், 12,000 BTU திறன் கொண்ட AR50H12D1JH/IG ட்வின் இன்வெர்ட்டர் (Twin Inverter) குளிரூட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த குளிரூட்டி சக்திவாய்ந்த மற்றும் வினைத்திறன் மிக்க குளிர்ச்சியை வழங்குவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ‘ட்வின் இன்வெர்ட்டர்’ தொழில்நுட்பமானது, மின் நுகர்வைக் கணிசமாகக் குறைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் வெப்பநிலையைச் சீராக்கி அறையைக் குளிர்ச்சியடையச் செய்கிறது.
Samsung SmartThings வசதியுடன் கூடிய இப்புதிய குளிரூட்டி, Wi-Fi இணைப்பு மூலம் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி வழியே எங்கிருந்தும் குளிர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள ‘ஏஐ எனர்ஜி மோட்’ (AI Energy Mode) பயனர்களின் பயன்பாட்டு பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப மின்சாரப் பயன்பாட்டைச் சீரமைக்க உதவுகிறது. அத்துடன், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 100 சதவீத செம்பு கண்டன்சர் (100% Copper Condenser) மற்றும் ‘டியூராஃபின் அல்ட்ரா’ (DuraFin Ultra) தொழில்நுட்பம் ஆகியவை துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாப்பளிப்பதோடு, அதன் நீடித்துழைப்பையும் உறுதி செய்கின்றன. இந்த மாதிரியின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 209,999 ரூபாவாகும்.
இந்த புதிய தயாரிப்புகளின் அறிமுகம் குறித்து Samsung Sri Lanka கருத்துத் தெரிவிக்கையில், “அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான புத்தாக்கங்களை வழங்குவதில் Samsung நிறுவனத்திற்கு இருக்கும் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையே இப்புதிய தயாரிப்பு வரிசை பிரதிபலிக்கிறது.” எனத் தெரிவித்தது. நவீன வீடுகளுக்குப் பொருத்தமான வடிவமைப்புத் தரங்களைப் பேணுவதுடன், செயல்திறன், வினைத்திறன் மற்றும் பயனர் வசதி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் Samsung வாடிக்கையாளர் இலத்திரனியல் (Samsung Consumer Electronics) இலங்கையில் ஒரு பலமான இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில், Samsung வாடிக்கையாளர் இலத்திரனியல் பிரிவானது, எளிமையான வடிவமைப்பு மற்றும் ஸ்மார்ட் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் ஊடாக, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வீட்டு உபயோகத் தீர்வுகளை மேம்படுத்துவதில் முன்னிலையில் திகழ்கிறது. குறிப்பாக, இலங்கையின் காலநிலை, மக்களின் வாழ்க்கை முறை மற்றும் பயன்பாட்டுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் உள்ளிட்ட வீட்டு உபயோகச் சாதனங்களை அந்நிறுவனம் விசேடமாகத் தகவமைத்து அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்தத் தயாரிப்புகள் தற்போது சிங்கர், சிங்ககிரி, தம்ரோ மற்றும் சொஃப்ட்லொஜிக் உள்ளிட்ட Samsung இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் வலையமைப்பின் ஊடாக நாடு முழுவதும் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு இச்சாதனங்களை இலகுவாகக் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, முன்னணி வங்கிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் ஊடாக பூச்சியம் சதவீத வட்டியற்ற கடன் அட்டை தவணைக்கட்டண வசதிகள் உள்ளிட்ட பல்வேறு இலகு செலுத்தல் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
இந்த அறிமுகத்தின் மூலம், நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறும், அன்றாடத் தேவைகளைத் பூர்த்தி செய்யும் வகையிலான நம்பகமான, வலுச்சக்தி திறன்மிக்க மற்றும் ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களை வாடிக்கையாளருக்கு வழங்குவதையே Samsung Sri Lanka நோக்கமாகக் கொண்டுள்ளது.