Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனம் 2025ஆம் ஆண்டில் வலுவான நிதி ஆற்றலை வெளிப்படுத்துகிறது
- மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் (GWP) ரூ 30.3 பில்லியன் மூலம் முதலீட்டுத் தொகுப்பின் வலிமை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
- 2024ஆம் ஆண்டில் ரூ.8.3 பில்லியனாகக் காணப்பட்ட புதிய வணிகத்தின் அளவு ரூ.12.5 பில்லியனாக கணிசமாக அதிகரிப்பு.
- ரூ.3.3 பில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தின் ஊடாக உறுதியான நிதி நிலைமை வெளிப்படுத்தப்பட்டது.
- ரூ.12.3 பில்லியன் காப்புறுதிக் கோரிக்கைகள் மற்றும் நன்மைகளுக்கான கொடுப்பனவுகள் மூலம் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.
- அரசாங்கப் பிணையங்கள் மீது ரூ.12.8 பில்லியன் மூலோபாய முதலீடுகளை மேற்கொண்டு தேசிய பொருளாதார நிலைத்தன்மைக்கு ஒத்துழைப்பு.
- அரசாங்கத்திற்குச் செலுத்திய வரி ரூ.5.7 பில்லியன், 66% அதிகரிப்பு
- சந்தையின் தலைமைத்துவம் மீளுறுதிப்படுத்தப்பட்டது
2026 ஏப்ரல், கொழும்பு : ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனம், முக்கிய நிதி அளவீடுகளில் சிறப்பான முடிவுகளுடன் 2025ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தி இலங்கையின் முன்னணி ஜெனரல் காப்புறுதிதாரர் என்ற தனது ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. போட்டியும், சவாலும் நிறைந்த சூழலில் தனது பன்முக முதலீட்டுத் தொகுப்புக்களின் மீள்தன்மையை வெளிக்காட்டும் விதத்தில் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணமாக ரூ.30.3 பில்லியனை தொடர்ச்சியாகப் பேணியுள்ளது.
ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தின் புதிய வணிகத்தின் அளவு 51 வீதமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ரூ.8.3 பில்லியனிலிருந்து தற்பொழுது ரூ.12.5 பில்லியனாக அதிகரித்திருப்பதன் மூலம் இந்நிறுவனத்திற்கு சந்தையில் காணப்படும் வலுவான கேள்வி, அதிகரித்துவரும் வாடிக்கையாளரின் நம்பிக்கை மற்றும் விநியோக வலையமைப்பின் அடைவெல்லை என்பன வலுவான நிலையில் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், இந்நிறுவனம் காப்புறுதிக் கோரிக்கைகள் மற்றும் நன்மைகளாக ரூ.12.3 பில்லியனைச் செலுத்தியிருப்பதுடன், இது 17 வீத அதிகரிப்பாகும். இந்த அளவுகோல்கள் தித்வா சூறாவளியின் பாதிப்பைப் பிரதிபலிப்பதுடன், காப்புறுதிதாரர்கள் தொடர்பில் நிறுவனம் நிலைத்தன்மையுடனும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது. அபாயப் பாதுகாப்பின் போது நாட்டின் முதன்மையான தெரிவாக ஸ்ரீ லங்கா இன்ஷ{ரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனமே காணப்படுகின்றது என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளது.
அரசாங்கத்திற்கான வரிப் பங்களிப்பு ரூ.5.7 பில்லியன் என்பதுடன், இது 66 வீத வருடாந்த அதிகரிப்பாகும் என்பதுடன், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் தேசிய வருமானத்தில் அதன் பங்களிப்பு என்பனவும் இதன் மூலம் பறைசாற்றப்படுகின்றன. 2024ஆம் அண்டு 19.4 வீதமாகக் காணப்பட்ட இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தைப்பங்கு 20.2 வீதமாக விரிவடைந்திருப்பதன் ஊடாக இலங்கையின் ஜெனரல் காப்புறுதித் துறையில் சந்தையின் முதல்வன் என்ற தனது ஸ்தானத்தை மீளவும் உறுதிசெய்துள்ளது.
மோட்டார் காப்புறுதிப் பிரிவானது கட்டுப்பண வருமான வளர்ச்சியாக 29.7 வீதத்தைப் பதிவுசெய்திருப்பதன் மூலம், மோட்டார் பிளஸ் இந்நாட்டின் முதல்தர மோட்டார் காப்புறுதி என்ற தனது ஸ்தானத்தை மீளுறுதிப் படுத்தியுள்ளது. அதேநேரம், தீ மற்றும் பொறியியல், கடல்சார், மருத்துவ மற்றும் பொது விபத்து ஆகியவற்றை உள்ளடக்கிய மோட்டார் அல்லாத பிரிவு 6.7 வீத வளர்ச்சியை அடைந்து, தொழில்துறையின் சராசரியை மீறிய செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் பன்முகப்பட்ட முதலீட்டுத் தெர்குதிகளின் வலுவான நிலைத்தன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கப் பிணையங்களில் ரூ. 12.8 பில்லியன் மூலோபாய முதலீடுகளை மேற்கொண்டிருப்பதன் ஊடாக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துக்களின் வலுவான தன்மை மற்றும் தேசத்தின் பொருளாதார நிலைத்தன்மையில் மேற்கொண்டுவரும் பங்களிப்பும் உறுதியாகியுள்ளது.
இந்த சிறப்பான செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. சமீர தர்மசேன, “சவால் மிக்க சூழல காணப்பட்டாலும் நிலையான வளர்ச்சியை வழங்கக் கூடிய எமது திறமையை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. எம்முடைய மீள்காப்புறுதி முகாமைத்துவம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த மூலோபாயங்கள் காரணமாகவே தித்வா சூறாளித் தாக்கத்தின் பின்னரும் இலாபகரமான நிலையில் எம்மால் நிற்கமுடிந்துள்ளது. வாடிக்கையாளர்களை மையாகக் கொண்ட எமது அணுகுமுறை மற்றும் செயற்பாட்டின் திறமை என்பன எம்மைத் தொடர்ந்தும் சந்தையின் முதல்வன் என்ற ஸ்தானத்தைத் தக்கவைக்க உதவியிருப்பதுடன், காப்புறுதிதாரர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் எமது அணியினரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு என்பவற்றையும் இது எடுத்துக்காட்டியுள்ளது” என்றார்.
ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸின் தலைவர் நுசித் குமாரதுங்க குறிப்பிடுகையில், “2025ஆம் ஆண்டில் எமது வலுவான செயற்பாடு நீண்டகால மதிப்புருவாக்கம் மற்றும் நிலைத்தன்மை மீதான உறுதிப்பாட்டைப் பறைசாற்றுகின்றன. விவேகம் நிறைந்த ஆபத்து முகாமைத்துவம் மற்றும் புத்தாக்கம் என்பவற்றின் ஊடாக சிறந்த சேவைக்கான புதிய அளவுகோல்களை ஏற்படுத்த முடிந்திருப்பதுடன், நாட்டின் பொருளாதார செயற்பாட்டிற்கும் பங்களிக்க முடிந்துள்ளது” என்றார்.
தித்வா சூறாவளி தாக்கத்தின் பின்னர் விரிவாக்கப்பட்ட சேவை அணுகல், நேரடி உதவிகள் மற்றும் நிதி உதவிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவான நிவாரணத் திட்டங்களை ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் முன்னெடுத்திருந்தது. அனர்த்தத்திலிருந்தான மீட்பு சூழலின் போது பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதி சேவைகளை அணுகுவதற்காக தெரிவுசெய்யப்பட்ட கிளைகள் கடமை நேரத்தை நீடித்திருந்ததுடன், மேலதிகமான சனிக்கிழமைகளில் திறந்திருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தமது காப்புறுதிக் கோரிக்கைகளைப் பெறுவதற்கும், உதவிகளைப் பெறுவதற்கும் ஏதுவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், வணிகங்கள் மற்றும் வீடுகளை மீளக்கட்டியமைப்பதற்கும், கட்டமைப்பு சேதங்களாலும், நீரினால் பரவக்கூடிய நோய்கள் உண்டாகும் ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பை வழங்கும் வகையிலும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் மற்றும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து 18 மாவட்ட பிராந்திய முகாமையாளர்களையும் உள்ளடக்கியதாக நடமாடும் தன்னார்வ அணியியனரைக் கொண்ட முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் (NDRSC), தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்துடன் இணைந்து 2025 நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தினங்களில் இரண்டு கட்டங்களாக மஹரகம மற்றும் திவுலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் 1,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுத்திருந்தது. பாதிக்கப்பட்டவர்களின் மீளெளுச்சி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டுமானத்திற்கு உதவும் வகையில் நிறுவனமும், நிறுவனத்தின் பணியாளர்களும் இணைந்து தேசத்தின் மீள்கட்டுமானப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 2026 ஜனவரியில் திறைசேரிக்கு நிதிப் பங்களிப்பை மேற்கொண்டிருந்தனர்.
2026ஆம் ஆண்டுக்கு நகரும் நிறுவனம் மோட்டார் மற்றும் மோட்டார் அல்லாத காப்புறுதிப் பிரிவுகளில் முதல்வன் என்ற ஸ்தானத்தைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொண்டு புத்தாக்கம், டிஜிட்டல் ரீதியான மாற்றம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடு என்பவற்றில் கவனம் செலுத்தும்.
பொறுப்பு வாய்ந்த பெருநிறுவனம், இலங்கையின் மிகவும் நம்பிக்கையைப் பெற்ற மற்றும் மிகவும் விரும்பப்படும் ஜெனரல் காப்புறுதி வர்த்தக நாமமாக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. எனினும், இலங்கையின் மிகவும் நம்பகமான ஜெனரல் காப்புறுதி வர்த்தகநாமமாகப் பெருநிறுவனக் குடியுரிமைக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தைப் பற்றிய குறிப்பு
பொதுக் காப்புறுதியில் ஆறு தசாப்தங்களுக்கு மேலான நிபுணத்துவத்தைக் கொண்ட SLICGL நிறுவனம் அதன் பலமான நிதி நிலைமை மற்றும் வாடிக்கையாளர்களை நோக்காகக் கொண்ட தன்மை என்பவற்றுக்குப் பெயர்பெற்றதாகவும், மிகவும் பெறுமதிவாய்ந்த, நம்பிக்கையைப் பெற்ற பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாகவும் திகழ்கின்றது. SLICGL நிறுவனம் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்ட தனது 142ற்கும் அதிகமான கிளை மற்றும் 69 சேவை நிலையங்களின் ஊடாக மோட்டார், தீ மற்றும் பொறியியல், மருத்துவம், பொது நிறுவன விபத்து மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற பலதரப்பட்ட துறைசார்ந்த காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வருகின்றது. இலங்கையில் காப்புறுதித் துறையில் மிகவும் உயர்ந்த தரப்படுத்தலை அதாவது A+ (lka) தரப்படுத்தலைக் கொண்ட காப்புறுதி தாரராகவும் SLICGL விளங்குகின்றது. அது மாத்திரமன்றி இனால் மிகவும் பெறுமதிமிக்க பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு Global Brand விருதில் ‘வாடிக்கையாளர் திருப்தியைப் பெற்ற சிறந்த காப்புறுதி நிறுவனம்’ என்ற அங்கீகாரத்தையும் SLICGL நிறுவனம் பெற்றுள்ளது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பு மற்றும் வலிமையான பாரம்பரியத்தினால் ஆதரிக்கப்படும் SLICGL நிறுவனம், தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்குத் தயாராக உள்ளதுடன், இடர் பாதுகாப்பில் நாட்டின் முதல் தேர்வாகவும் விளங்குகின்றது.