7 News Pulse

கூடிய விரைவில் குறைந்த விலையிலான மதுபானம் அறிமுகம்

இலங்கை மதுவரித் துறை, நாட்டில் சட்டவிரோத மதுபான பயன்பாடு அதிகரித்ததை கட்டுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலையிலான புதிய மது வகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது. பொது நிதி குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில், மதுபான விலைகள் அதிகரித்ததால் பலர் சட்டவிரோத மதுபானம் அருந்தத் தொடங்கியிருப்பதுடன், இதனால் அரசாங்க வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் துறை ஆணையாளர் நாயகம் உதய குமார தெரிவித்ததுடன் முறையான ஒழுங்குமுறைகள் மற்றும் கண்காணிப்பின் மூலம், சட்டவிரோத மதுபானங்களை தடை செய்து, மக்களை…

Read More

க.பொ. த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (G.C.E O/L) பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி 2024ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி நிறைவடைய உள்ளதால் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல் மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நடத்த தடை…

Read More

“BATTLE OF THE BLUES” 2025 – வெற்றி சென்.தோமசுக்கு உரித்தானது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நேற்று (மார்ச் 08) முடிவடைந்த 146வது”BATTLE OF THE BLUES” என அழைக்கப்படும் நீலவர்ணங்களின் சமரில் றோயல் கல்லூரியினை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென். தோமஸ் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இதுவரை நடைபெற்ற நீலவர்ணங்களின் சமரில் 36 – 36 என சமநிலையை இரண்டு பாடசாலைகளும் பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் றோயல் அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 233 ஓட்டங்களை சவால் மிக்க வெற்றி இலக்காக வைக்க அதை எட்டிப்பிடிக்க இரண்டாவது…

Read More

இரவுநேரங்களில் உக்ரேனை தாக்கும் ரஷ்யா

உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில் ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதோடு முப்பதிற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இதனை உக்ரைனின் அவசர சேவைகள் துறை உறுதி செய்து தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் எட்டு 5 மாடிகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும் ஒரு நிர்வாக கட்டிடமும் 30 கார்களும் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளபக்கத்தில் “எங்களைப் போலவே அமைதியை…

Read More

கோட்டைக்கேணியிருந்து அக்கரைவெளிவரையான பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்.

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளி வரை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று (மார்ச் 08) நேரில் சென்று பார்வையிட்டார். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு உள்ளீடுகளையும், விளைச்சலையும் கொண்டு சென்று வருவதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக காணப்படும் இந்த வீதி பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக விவசாயிகள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார்கள். இந்த கண்காணிப்பில் இணைந்து கொண்ட புதுக்குடியிருப்பு…

Read More

தேங்காயால் தொலைந்த வாழ்வு – மக்கள் விசனம்

நாட்டில் நிலவும் அண்மைக்காலமாக தேங்காய் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதன் காரணமாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளதோடு, சுமார் 450,000 பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். நாட்டில் விளையும் தேங்காய்களில் பெரும்பான்மையானவை வெவ்வேறு வகைகளில் ஏற்றுமதியையப்படுகின்றன. ஏனையவையே உள்ளூர் உற்பத்திகளுக்கு குறிப்பாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதேநேரம் அத்தியாவசிய பொருற்களின் கீழ் வருகின்ற தேங்காய் எண்ணையை இறக்குமதி வரி இல்லாமல் குறைந்த இறக்குமதி செய்கின்றார்கள் எனவும் அந்த எண்ணெய் தரத்தில் குறைந்ததாக உள்ளதாகவும்…

Read More

கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு.

கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று(மார்ச் 7) இரவு டொரோண்டோவின் – ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டர் கேளிக்கை விடுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 12ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிய குற்றவாளி யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அந்த குற்றவாளியைப் பிடிக்க…

Read More

ஆகஸ்டில் பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் – எம்.பி அர்ச்சுனா

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் என்று யாழ் மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் காட்டம். பாராளுமன்றத்தில் இன்று (மார்ச் 08) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைபுதான் பெண்களை துணிகரமாக உலகுக்கு வெளிக்காட்டியது. சுதந்திர பறவைகள் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில்…

Read More

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய.

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்கள் இயற்றப்பட்டுசுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும் எனவும் இதற்கான அரசியலமைப்பு பேரவைக்கு நியமன பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (மார்ச் 08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More