7 News Pulse

மக்களுக்காக முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி…!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செயற்திறனுடனும் வழங்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றையதினம் (29) இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நிலைமையில் மக்களுக்காக முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் நன்கு ஒருங்கிணைந்து பணியாற்றி,…

Read More

வேகமாக உயர்ந்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம் – மக்களை அவசரமாக வெளியேற உத்தரவு!

களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டுத் தடை நிரம்பி வழிகிறது என்று கொழும்பு மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிலைமை சுற்றியுள்ள தாழ்வான பிரதேசங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் மாலபே-கடுவெல பகுதி மற்றும் அருகிலுள்ள பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மாலபே ஆண்கள் கல்லூரிக்கு அல்லது பிட்டுகல யசோதரா மகா வித்தியாலயத்திற்குச் செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

மக்களின் மனதை வென்ற கலைஞர் மறைந்தார்.

இலங்கையின் பிரபல கானா பாடகர் “நவகம்புர கணேஷ்” உடல்நலக்குறைவால் இன்று(29 11 2025) மாலை காலமானார். தன்னுடைய உத்வேகமான குரலாலும், வித்தியாசமான சிகையலங்காரம், ஆடை அணிகலன்களாலும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் “நவகம்புர கணேஷ்”. பல மொழிகளில் மிக லாபகமாக பாடல்களை பாடி ரசிகர்களை ஆடவைத்து மகிழ்ச்சிப்படுத்தி அழகுபார்ப்பார். குறிப்பாக இவர் பாடும் கானா பாடல்களுக்கும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாடல்களின் வரிகளை நகைச்சுவையாக கோர்த்து பாடும் அழகிற்கும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் அதிகம். “மட்டக்குழியில கட்ட கவுனோட” என்ற பாடலை…

Read More

நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.  டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் 100இற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதுடன் எண்ணற்றவர்கள் காணாமல் போயுள்ளனர்.  இந்நிலையில், மேலும் தீவிரமடைந்து வரும் காலநிலையின் சீற்றம் காரணமாக தற்போதைய நிலைமை இன்னும் மோசமடையலாம் என கூறப்படுகின்றது.  இதற்கிடையில் ஏற்படும் பாதிப்புக்களையும் உயிரிழப்புக்களையும் குறைக்கும் முகமாகவும் மக்கள் பாதுகாப்பை உறுதி…

Read More

தன்னார்வலர்களாக களம் இறங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்.

பேரிடர் மேலாண்மை மையத்தில் இந்த நெருக்கடியான நேரத்தில் தங்கள் உறுதியான ஆதரவை தன்னார்வலர்களாக வழங்கி வரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு மக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும். உங்கள் சேவை தொடரட்டும்.

Read More

இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய C-130 விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதைச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் C-130 விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதைச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திடம் ஆலோசகர் (வளர்ச்சி ஒத்துழைப்பு) மைத்ரே குல்கர்னி, உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் மந்தீப் சிங் நேகி மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள்…

Read More

வழமைக்கு திரும்பும் இலங்கை – தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து

டிட்வா புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது. இன்று நண்பகலளவில் முழுமையாக கடலுக்குள் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பேரழிவுகளை ஏற்படுத்திய டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும். இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு…

Read More

ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் மீட்ப்பு நடவடிக்கை.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கண்காணித்துள்ளார். அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் சிக்கிய பேருந்திலுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது. கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகாலை வேளையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் விமான படையின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் ஜனாதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

Read More

Study Queensland, Trade and Investment Queensland (TIQ) Strengthen Global Education Pathways for Sri Lankan Students

Trade and Investment Queensland (TIQ), the Queensland Government’s global business agency, together with Study Queensland, has strengthened its commitment to expanding high-quality international education opportunities for Sri Lankan students through a special two-day engagement programme featuring representatives from five leading Australian universities. Delegates from Griffith University, James Cook University, Bond University, Central Queensland University, and…

Read More