Doneproduction

இன்றைய வானிலை தொடர்பிலான அறிவித்தல்..!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை,…

Read More

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.56 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.82 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.02 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Read More

பேக்கரி ஊழியரின் மர்ம மரணம்! ஆரம்பமாகும் விசாரணை

களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் பேக்கரி ஊழியர் ஒருவர் அங்குகுள்ள படிக்கட்டு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மத்துகம, அகலவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேக்கரியின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய களுத்துறை குற்ற விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பிரவேசித்து ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Read More

நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு நோய்

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். மேல் மாகாணத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இது 48 சதவீதமாகும் என்றும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர்…

Read More

கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் மேலும் ஒரு விபத்து : 11 பேர் காயம்..!

கொத்மலை, கெரண்டி எல்ல பேருந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

யாழ் – செம்மணி பகுதியில் விபத்து : இருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணம் – செம்மணி சந்தியில், மோட்டார் சைக்கிளுடன் பட்டா ரக வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

பேருந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டுத் தொகை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைப்பு.

இறம்பொடை – கெரண்டி எல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உரிய பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய, உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் வீதம் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. விபத்தில் உயிரிழந்த 23 பேர் வசித்துவந்த, திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுணாகொட்டுவ, பண்டுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வண்ணாத்திவில்லு,…

Read More

மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து

அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

தெமட்டகொடையில் நபரொருவர் படுகொலை

தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவில பட்டுமக பகுதியில் நேற்று (13) மாலை, தடிகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெமட்டகொடை பொலிஸ் நிலையத்துக்கு, ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்து தரையில் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இரவு நேர ரோந்து பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, காயமடைந்த நபரை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார். கொலை செய்யப்பட்டவர், மேம் பாலத்துக்கு அருகில் தங்கியிருந்த,…

Read More

துருக்கிக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்.. நிறுத்தப்பட்ட அப்பிள் இறக்குமதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களுக்கு மத்தியில் துருக்கிக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. ஆயுதங்கள் வழங்குவது உட்பட பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படுவதால் ‘துருக்கியைத் தடை செய்’ என்ற ஹஷ்டேக் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது. இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை கைவிட்டுள்ளனர். இதன் விளைவாக துருக்கிய ஆப்பிள்கள் புனே சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. துருக்கிய ஆப்பிள்களைப் புறக்கணிப்பது புனேவின் பழச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை…

Read More