இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குகின்றனர் – அஜித் பி. பெரேரா
சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். ஹிரு செய்திப் பிரிவுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்குமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அதற்கான சாத்தியக்கூறுகள் சர்வதேச ரீதியில் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.