Doneproduction

காற்றின் தரக் குறியீட்டின் சமீபத்திய நிலை

காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் நேற்று (09) காற்றின் தரக் குறியீடு (SL AQI) சற்று மோசமான நிலையில் இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவும் வானிலை நிலையைப் பொறுத்து, இன்றைய காற்றின் தரக் குறியீடு நாள் முழுவதும் 40 முதல் 64 வரை இருக்கலாம் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. தீவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்திலும், யாழ்ப்பாணம், வவுனியா,…

Read More

பயிர்கள் தொடர்பான தகவல்களை பெற புதிய குறுஞ்செய்தி இலக்கம் அறிமுகம்

பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் இந்த தகவல்களை பெறலாம் . இதன் மூலம் 10 பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் உங்கள் கைபேசியில் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு 1920 தொலைபேசி எண்ணை அழைத்து அல்லது KSMS இடைவெளி உங்கள் பெயர் குறிப்பிட்டு…

Read More

வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பணிநீக்கம்!

வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை போக்குவரத்து சேவைகளில் பெண்களை சேர்ப்பதற்கான கொள்கை முடிவ

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில் சேவையில் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று அவர் இதனை தெரிவித்தார் நாளை (08) வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை பேருந்துகள் பெண்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிப்பு

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. ரீ – 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் காவல்துறை உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. சந்தேகநபரின்றி துப்பாக்கி மாத்திரம் மீட்கப்பட்டால் காவல்துறையினருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்கும் நபருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என காவல்துறை…

Read More

ஸ்ரீ தலதா தரிசனத்தை பாதுகாக்க 10,000 பொலிஸார் கடமையில்

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள ஸ்ரீ தலதாவிஷயத்தின் பாதுகாப்பிற்காக 10,000 பொலிஸாரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர் எஸ் அபேகோன், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டமும் அமுலில் உள்ளதாக தெரிவித்தார்.

Read More

நாடு முழுதும் சீரான காலநிலை

இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் நாட்டில் முக்கியமாக மழையற்ற காலநிலை நிலவுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.46 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.45 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

Read More

மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் உள்ள அரச காணியொன்றைத் தனியார் நபர்களுக்குப் போலி ஆவணங்களுடன் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

நாட்டின் 04 மாவட்டங்களில் காலநிலை மாற்றம்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More