Doneproduction

அரச வெசாக் பண்டிகை இந்த ஆண்டு நுவரெலியாவில்!

இந்த ஆண்டு அரச வெசாக் பண்டிகை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய வெசாக் வாரம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. அரச வெசாக் பண்டிகை குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​பௌத்த ஞானம் ஏற்படும் வகையில், இந்த ஆண்டு அரச வெசாக் கொண்டாட்டம் அனைத்து இன மக்களின்…

Read More

புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரல்

புறக்கோட்டையில் உள்ள பேங்க்சோல் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் தீயை அணைப்பாற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

Read More

இந்தியா மற்றும் சீனா மீதான வரிகள்

நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகளைக் காரணம் காட்டி, ஏப்ரல் 2 முதல் இந்தியா உட்பட அமெரிக்காவின் பல வர்த்தக கூட்டாளிகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். கனேடிய மற்றும் மெக்சிகன் இறக்குமதிகள் மீதான புதிய 25% வரிகள் அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரிகளை 20% ஆக இரட்டிப்பாக்கிய பின்னர் டிரம்பின் பரஸ்பர வரி வாக்குறுதி வந்தது. இதன் விளைவாக, அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக…

Read More

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறை.

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த தெரிவித்தார். இன்று (05) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக நலத் திட்டமும் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார் சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக 100 சுற்றுலாத் தலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் ,அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக…

Read More

மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் வியாபார நிலையங்களை வழங்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

மித்தெனிய முக்கொலை.. சிக்கிய துப்பாக்கிதாரி!

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவத்தில் வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது 8 வயது மகள்,9 வயது மகன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியாகினர். வீரகெட்டிய மித்திதெனிய பகுதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது உந்துருளியில் பயணித்த அடையாளந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்…

Read More

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. டுபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்தநிலையில், 265 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த வெற்றியின்…

Read More

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இல்லாததால், சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.1.2 மில்லியன் ரொக்கப் பரிசு…

Read More

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி…

Read More

AK 64 படத்தின் இயக்குனர் இவரா ? வெளிவந்த மாஸ் அப்டேட்

குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கப்போகும் அவருடைய 64வது படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், விஷ்ணு வர்தன், சிறுத்தை சிவா, பிரஷாந்த் நீல் போன்ற இயக்குநர்களின் பெயர்களும் இதில் அடிபட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னணி நடிகரும், பிரபல இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் தான் AK 64 திரைப்படம் உருவாகப்போவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்துடன் இட்லி கடை படம் வெளியாவதாக கூறப்பட்டு வந்த…

Read More