இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி அட்டவணை அறிவிப்பு
10வது பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் ( PSL) போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த போட்டி ஏப்ரல் 11 முதல் மே 18 வரை நடைபெற உள்ளது. 6 அணிகள் விளையாடும் போட்டியில் 34 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் போட்டி ஏப்ரல் 11 ஆம் திகதி நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் இரண்டு முறை பிஎஸ்எல் சாம்பியனான லாகூர் கிலாண்டர்ஸ் இடையே நடைபெறும். இந்த போட்டி நடைபெறும் காலத்திலேயே ஐபிஎல் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது….
