gurueaswar

IDH பகுதியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் திடீரென தீ!

IDH பகுதியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த கோட்டே தீயணைப்புப் பிரிவு 4 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாடிகளைக் கொண்ட இந்த வர்த்தக வளாகத்தில் தீ பரவியுள்ளதாகவும், தீயணைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Read More

டிரம்பைச் சந்திக்கிறார் ஜெலென்ஸ்கி: போரை முடிக்கத் தீவிர முயற்சி

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். புத்தாண்டுக்கு முன்பாகவே போர் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வரைவுத் திட்டங்கள் தயாராக உள்ள நிலையில், இது குறித்து டிரம்ப்பின் தூதர்களுடன் ஏற்கனவே ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ரஷ்யா கோரும் நிலப்பரப்பு சமரசங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.  இந்தச் சந்திப்பு போரை முடிவுக்குக்…

Read More

பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளை தவிர்த்துக்கொள்ளுங்கள் – வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகக் குடும்பத்துடன் வெளிமாவட்டங்களுக்குச் செல்வோர், வீதி விபத்துகள், நீர் நிலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்படக்கூடிய விபத்துகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்திய நிபுணர் சமித்த சிரிதுங்க வலியுறுத்தியுள்ளார்.  வீதி விபத்துகள் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More

மோட்டார் வாகன வரியை உடன் குறைக்க வேண்டும் ; மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் கோரிக்கை

நடுத்தர மக்கள் கொள்வனவு செய்யும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் குறைக்க வேண்டும் என சிலோன் மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிலோன்  மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் காரியாலயத்தில்  வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டில் அண்மையில் நிலவிய இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர் வாகன கொள்வனவு வீதம் சடுதியாக குறைவடைந்துள்ளது.  வாகன இறக்குமதிக்காக முன்பதிவுகள் செய்தவர்கள் இயற்கை அனர்த்தங்களால்…

Read More

சுனாமி அலையினால் சேதமடைந்த ரயிலின் இயந்திரம் இயங்கவில்லை

காலி, பெரலிய பகுதியில் சுனாமி அலையினால் சேதமடைந்த ரயிலின் இயந்திரம் இயங்கவில்லை. எனினும், பேரழிவை நினைவுகூரும் வகையில், ‘சுனாமி ரயில்’ என அழைக்கப்படும் ரயிலை இன்று வெள்ளிக்கிழமை  (26) வேறு ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தி மாத்தறைக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேதமடைந்த இயந்திரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருவதாகவும், தொழில்நுட்பக் கோளாறினால்  இம் முறை இயக்கப்படவில்லை. இயந்திரத்தின் அச்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றைய தினம் காலை இயக்கப்படவில்லை என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 490 பேர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (25) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29,539 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 179 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 88 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 322…

Read More

கண்டி மாவட்ட செயலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸார் மற்றும் பொலிஸ விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பெயர் தெரியாத ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் செய்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருக்கும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை சகல துறைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றத்தையிட்டு வியட்நாம் தூதர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டாம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.  இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான தற்போதைய இராஜதந்திர உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் அந்த உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.  மேலும் வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது…

Read More

ஐரோப்பிய குளிர்காலச் சுற்றுலா: கஸகஸ்தானில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்திறங்கியது முதல் குழு!

ஐரோப்பாவில் குளிர்காலத்தை முன்னிட்டு, கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த முதல் விமானம் நேற்று வியாழக்கிழமை (25) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் வந்தடைந்தது.  கஸகஸ்தானின் அல்மாட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் அஸ்தானா நிறுவனத்திற்குச் சொந்தமான KC-167 ரக விமானம் மூலம், மாலை 4.10 மணியளவில் இந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்.  இந்த விமானத்தில் 182 பயணிகளும் 08 பணிக்குழாமினரும் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இந்த விமான சேவையானது வாரந்தோறும் திங்கள் மற்றும்…

Read More

சுனாமி பேபி , பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள சுனாமி பேபி அபிலாஷின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியின் முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக அபிலாஷின் பெற்றோர் அஞ்சலியை இன்று வெள்ளிக்கிழமை (26) செலுத்தினர். தற்போது 21 வயதுடை சுனாமி பேபி 81 என அறியப்படும் ஜெயராசா அபிலாஷ் தனது உயர் படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது இல்லத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபியில் அவரது பெற்றோர் இன்று சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Read More