gurueaswar

“குடு ரொஷான்” துப்பாக்கியுடன் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமாக “குடு ரொஷான்” என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது “குடு ரொஷான்” என்பவரிடமிருந்து மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பண்டிகை நாட்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

வரவிருக்கும் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இதன்படி, மத சேவைகள் மற்றும் பண்டிகையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் நடைபெறும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மதத் தலைவர்கள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுடன் பொலிஸார் ஒருங்கிணைந்துள்ளனர். . தகவல்களைச் சேகரிக்கவும் தேவைப்பட்டால் விரைவான நடவடிக்கை எடுக்கவும் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் பொலிஸார் நகர்ப்புற மையங்களில்…

Read More

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அர்ச்சுனா

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை (24) சரணடைந்துள்ளார்.  கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதனையடுத்து அர்ச்சுனாவு இன்று கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Read More

சீனாவின் New Blueprint New Horizon திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராட்டு!

“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப் பாராட்டினார். சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடமான New Blueprint New Horizon வெளியீட்டி நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள ஷாங்க்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. சீனத் தூதரகத்தின் அழைப்பின் பேரிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு…

Read More

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாய் நிவாரண உதவித்தொகையைப் பெறுவதற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார தெரிவித்துள்ளார்.  கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.  குறித்த கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தலைமையில் நடைபெற்றது.. இதன்போது…

Read More

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 901 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 901 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 952 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 01 கிலோ 487 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 04 கிலோ 925 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01  கிலோ  056 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  05 கிலோ …

Read More

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 34 சாரதிகள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 34 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.  இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 17 பேரும், சந்தேகத்தின் பேரில் 743 பேரும், பிடியாணை உத்தரவு…

Read More

தையிட்டி சம்பவத்துக்கு பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் கண்டனம்!

பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் தையிட்டி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபையின் அமர்வானது தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் தலைமையில் இன்று (24) காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. இன்றைய அமர்வில் 2 உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.  இந்த அமர்வில் 2026ஆம் ஆண்டுக்கான நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அத்துடன் அண்மையில் தையிட்டியில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கும்…

Read More

வெனிசுவேலா தொடர்புடைய எண்ணெய் கப்பல்: அமெரிக்க கடலோர காவல் படைக்கு வளக் குறைபாடு

அமெரிக்க கடலோர காவல் படை, வெனிசுவேலாவுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் “பெல்லா 1” என்ற எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், நடவடிக்கை மேற்கொள்ளும் முன் கூடுதல் படைகள் வருகையை அவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த கப்பல் காவல் படை ஏறுவதை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், ஹெலிகாப்டர்களில் இருந்து கயிறு வழியாக கப்பலில் இறங்கும் சிறப்பு பாதுகாப்பு அணிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்களை தடுக்கும் டிரம்ப் உத்தரவு அமலில்…

Read More

ஜிசாடா நிறுவனத் தலைவர் மீது ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு

பெட்போல் (Fedpol) தகவலின்படி, சுவிஸ் வாசனை திரவிய பிராண்டான ஜிசாடா (Gisada) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்பன் அடெமி, கடந்த காலங்களில் தீவிர இஸ்லாமிய “ரீட்!” (Read!) குர்ஆன் விநியோக இயக்கத்தையும், ஐ.எஸ். ஆதரவாளர்களையும் நிதியுதவி செய்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. புகைப்படங்கள், உரையாடல் பதிவுகள் மற்றும் வாகனப் பயண தகவல்கள் மூலம் தீவிரவாத வட்டாரங்களுடன் தொடர்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆர்பன் அடெமி அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றாக மறுத்துள்ளார். ஜிசாடாவின் ஆதரவாளரான எப்.சி. பாசல்…

Read More