gurueaswar

ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்!

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது 23% முதல் 30% வரை இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேசிய கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் கபில பந்துதிலக்க கூறுகையில், நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒருவர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அவர்களில் பெரும்பாலோர் 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நீரிழிவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவர்களில் 11% பேர் பார்வையற்றவர்களாக மாறக்கூடும் என்று…

Read More

அமெரிக்காவின் பல உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நீக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாட்டிறைச்சி மற்றும் COFFEE உள்ளிட்ட பல அமெரிக்க உணவுப் பொருட்களுக்கான வரிகளை நீக்கியுள்ளார். நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் உயர்ந்ததால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரிகள் குறைக்கப்பட்ட உணவுகளில் வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி ஆகியவை உள்ளடங்குகின்றன . வரிகள் நீக்கம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Read More

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு சிறப்பு ஒப்பந்தம்

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக நேற்று (14) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் மற்றும் மொன்டானா தேசிய காவல்படையின் செயல் ஜெனரல் பிரிகேடியர் ட்ரென்டன் கிப்சன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பாக பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா இதில் கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மாநில…

Read More
Delhi bomb blast

ஸ்ரீநகரில் வெடிப்பு! 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் (14) இரவு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டது. காவல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்யும் போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய ஊடகங்கள் மேலும் கூறுகையில், இந்த வழியில் ஏராளமான வெடிபொருட்கள் வெடித்ததாகவும், இதனால் 07 பேர் இறந்ததாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளன.

Read More
fine

கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு அபராதம்

15 Nov, 2025 | 03:14 PM யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட  வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை, உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான்…

Read More

சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகள் தயாரிக்க ஆலோசனை

பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது. பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பொலிஎதிலின் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின்…

Read More

ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வருடாந்த அறிக்கைகள் பரிசீலனை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையும், 2023 ஆம் ஆண்டிற்கான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த அறிக்கையும் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க  தலைமையில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு வியாழக்கிழமை (13)  பாராளுமன்றத்தில் கூடியபோதே இது இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அந்த…

Read More

NPPயின் பதியதலாவ பிரதேச சபை வரவு செலவுத் திட்டமும் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் பதியதலாவ பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.  பிரதேச சபையின் தவிசாளர் அனுர ராஜபக்ஷவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதில் வரவு செலவுத் திட்டத்திற்குச் ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன.  பதியதலாவ பிரதேச சபையின் மொத்த சபை அங்கத்தவர் எண்ணிக்கை 20 ஆகும்.  இதேவேளை, தனமல்வில பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.  வாக்குகள் சமனானதன்…

Read More

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  சுவசெரிய நிதியத்தின் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   இதற்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும், உலகில் கிடைக்கும் சமீபத்திய…

Read More

பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்

பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களினது தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன் ரூ.400 அதிகரிப்பை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.  இதில், சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் ரூ.200 வையும், அரசாங்கம் ரூ.200 வையும் செலுத்தும் தீர்மானத்தற்கு வந்துள்ளது.  துயர் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வரும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கு, இந்த ரூ.400 சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள எடுத்த தீர்மானம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும்.  இதை விட அதிக ஒதுக்கீடு இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டும் என…

Read More