gurueaswar

இறுதி போட்டி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் ரொனால்டோ!!!!

போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரும், உலக கால்பந்து ஜாம்பவானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ‘Tourise Summit’ மாநாட்டில் இது குறித்துப் பேசிய 40 வயதான ரொனால்டோ, இன்னும் “ஓரிரு ஆண்டுகளில்” கால்பந்தில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டில் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணம்…

Read More

பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணை!

திருகோணமலை முத்துநகர் பகுதியில் பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  இச்சம்பவம் இன்று (11) முத்துநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  சிசு பிறந்து 42 நாட்கள் எனவும் இரவு சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்த தாய் இன்று அதிகாலை சிசுவை பார்த்த போது உயிரிழந்த நிலையில் குழந்தை இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. 

Read More

பெற்றோலிய களஞ்சிய மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பெற்றோலிய உற்பத்திகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக கொலன்னாவை முனையத்தில் தற்போது 30 மற்றும் 31 ஆம் இலக்க எரிபொருள் களஞ்சியத்தின் புதிய தாங்கி மூலம் புனரமைக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, குறித்த பணிகளுக்கு இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய முனையக் கம்பனியின் நிதியைப் பயன்படுத்தி பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக…

Read More

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டு தற்போது ஐம்பது வருடங்கள் கடந்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் சினிமா தொழிற்றுறைக்குரிய தொழிநுட்பங்களில்…

Read More

யாழில் ஹெரோயினுடன் 06 பேர் அதிரடி கைது

தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

நவம்பர் மாதம் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் இலங்கையில்!

2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் 61,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நவம்பர்  மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 15,541 ஆகும். அத்துடன், ரஷ்யாவிலிருற்து 8,220 சுற்றுலாப் பயணிகளும்,  ஜெர்மனியிலிருந்து 4,740 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,450 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 2,614 சுற்றுலாப் பயணிகளும்,…

Read More

டெல்லி குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரி அடையாளம்!

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் வைத்தியர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளாதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியர் உமர் முகமது, கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டைக்கு அருகே வெடித்த வெள்ளை ஹ_ண்டாய் ஐ 20 காரின் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் சுமார் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.  சந்தேக நபர், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன், செங்கோட்டைக்கு அருகில் அந்தக் காரை 3 மணி நேரம் நிறுத்தி…

Read More

எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என ராேஹித்த தெரிவிப்பு

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Read More

போலி சட்டத்தரணி மட்டக்களப்பில் அடையாளம் !

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (11) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது, கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மட்டக்களப்புப் பகுதியில் செயற்பட்டு வந்த ஒரு போலி ஆண் சட்டத்தரணி, கடந்த சனிக்கிழமை (08) ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் ஆவார்.  கைது…

Read More