கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நேற்று (மார்ச் 08) முடிவடைந்த 146வது”BATTLE OF THE BLUES” என அழைக்கப்படும் நீலவர்ணங்களின் சமரில் றோயல் கல்லூரியினை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென். தோமஸ் அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் இதுவரை நடைபெற்ற நீலவர்ணங்களின் சமரில் 36 – 36 என சமநிலையை இரண்டு பாடசாலைகளும் பெற்றுள்ளன.
இந்தப் போட்டியில் றோயல் அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 233 ஓட்டங்களை சவால் மிக்க வெற்றி இலக்காக வைக்க அதை எட்டிப்பிடிக்க இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். தோமஸ் ஒரு ஓவர் மீதம் இருக்க 5 விக்கெட்களை இழந்து 233 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களால் தொடரை வெற்றியீட்டியது.
சென். தோமஸ் அணியின் சதேவ் சொஸ்ஸா, தினேத் குணவர்தன, டேரியன் டியகோ ஆகிய மூவர் குவித்த அதிரடி அரைச் சதங்கள், றோயல் அணியின் சவாலை முறியடிக்க உதவின.
போட்டியின் முதலாம் நாளான வியாழக்கிழமை (மார்ச் 06) ரெஹான் பீரிஸ் குவித்த 158 ஓட்டங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் றோயல் அணி 7 விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி தனது முதல் இன்னிங்ஸில் 32 ஓட்டங்களைப் பெற்றிருந்த சென் தோமஸ் அணி, இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (மார்ச் 07) முழு நாளும் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாம் நாளன்று தினேத் குணவர்தன குவித்த 119 ஓட்டங்களும் அவினாஸ் பெர்னாண்டோ பெற்ற 50 ஓட்டங்களும் சென். தோமஸ் அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தன.
போட்டியின் கடைசி நாளான நேற்றய(மார்ச் 8) தினம் இரண்டு அணிகளும் வெற்றிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தன.
றோயல் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 51 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அணித் தலைவர் ரமிரு பெரேரா துடுப்பாட்டத்தை டிக்ளயார் செய்தார்.
ரெஹான் பீரிஸ், ரமிரு பெரேரா ஆகிய இருவரும் அரை சதங்கள் குவித்து றோயல் அணியை ஸ்திரப்படுத்தினர்.
42 ஓவர்களில் 233 ஓட்டங்கள் என்ற சவால்மிக்க வெற்றி இலக்கை நோக்கி சென். தோமஸ் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்தபோது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்றே கருதப்பட்டது.
ஆனால் மேலே குறிப்பிட்ட மூன்று வீரர்களும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களை குவித்து சென். தோமஸ் அணிக்கு அபார வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட…
அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்தை ரஷ்யா நிராகரித்துள்ளதுடன், இது உக்ரைனுக்கு மாத்திரமே தற்காலிக ஓய்வு அளிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி…
ஹட்டன், கொட்டகலை நகரில் அமைந்துள்ள கோவில் ஒன்றின் திருவிழாவிற்குக் கொண்டு வரப்பட்ட யானை, இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது. கோவில்…
இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை…
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் (SP) சிறிதத் தம்மிக, அக்மீமன, தலகஹ பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.…
இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக 'உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? - முன்கூட்டியே கண்டறிதல்,…