உப்பு இறக்குமதிக்கு அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க இன்று (மே 15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதனூடாக, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பு மற்றும் நுகர்வோருக்கு தேவையான அயடின் கலந்த உப்பு இறக்குமதிக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More

அமெரிக்காவால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் டொலர் பெறுமதியான உபகரணங்கள்.

அமெரிக்காவினால் 1 மில்லியன் டொலர் (299 மில்லியன் இலங்கை ரூபா) மதிப்புள்ள கதிர்வுச்சு இனங்காணல் உபகரணங்கள் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டன. இந்த உபகரணங்கள் கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்தும், ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் மற்றும் அணு மற்றும் கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜனாதிபதி அலுவலக 26 அதிசொகுசு வாகனங்கள் இன்று ஏலத்தில்…!

ஜனாதிபதி அலுவலக அதிசொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக, சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் கடந்த 10 வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன், அதற்கமைவான விலைமனுக் கோரல் நேற்றுடன் நிறைவடைந்தது. அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக நடத்தப்பட்ட வாகன ஏலத்தில் 15 வாகனங்கள்…

Read More

வர்த்தக நிலையமொன்றை சோதனையிட சென்ற அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்கிய இருவர் கைது…!

குருநாகல் – கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் அச்சுறுத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாக்குதலைக் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நடத்தியதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், தற்போதும் சேவையில் இருக்கும் காவல்துறை அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

யாழில் போதைப்பொருட்களால் அதிகரிக்கும் மரணங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்புகள் மீண்டும் சடுதியாக அதிகரித்து வருகின்றன என்று துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக அளவுக்கு அதிகமான போதைப்பொருள் பாவனையால் சிலர் உயிரிழந்துள்ளனர். அதீத போதைப்பொருளால் ஏற்படும் மரணங்கள் நீண்டகாலமாக இல்லாமலிருந்த நிலையில், அண்மைக்காலமாக மீண்டும் போதைப்பொருளால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளமை வேதனையான விடயமாகும். கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 35…

Read More

பேருந்து இறக்குமதி தொடர்பில் புதிய தீர்மானம்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாதுகாப்பான மற்றும் நவீனமான பேருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் கீழ் இயங்குகின்றனவா? என்பதை ஆராயும் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து…

Read More

இன்றைய வானிலை தொடர்பிலான அறிவித்தல்..!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை,…

Read More

பேக்கரி ஊழியரின் மர்ம மரணம்! ஆரம்பமாகும் விசாரணை

களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் பேக்கரி ஊழியர் ஒருவர் அங்குகுள்ள படிக்கட்டு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மத்துகம, அகலவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேக்கரியின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய களுத்துறை குற்ற விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பிரவேசித்து ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Read More

நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு நோய்

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். மேல் மாகாணத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இது 48 சதவீதமாகும் என்றும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர்…

Read More

கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் மேலும் ஒரு விபத்து : 11 பேர் காயம்..!

கொத்மலை, கெரண்டி எல்ல பேருந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More