குற்றச்செயலை தடுப்பதற்கு பொலிஸாரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் அறிந்தவர்கள் அல்லது அயலவர்கள் மற்றும் சமூகத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட பொலிஸாரால் தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் குற்றவாளி விளக்கமறியலில்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை தடுத்து வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கொழும்பு குற்றப்பிரிவு குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, கொழும்பு பிரதான நீதவான்…

Read More

மித்தெனிய முக்கொலை – கைதானவர்கள் குறித்து வௌியான தகவல்

மித்தெனியவில் அருண விதானகமகே, அவரது மகள் மற்றும் மகனை சுட்டுக் கொண்ட கொலையாளிகள் பற்றிய மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த முக்கொலைகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மித்தெனிய பொலிஸ் பிரிவின் தெபொக்காவ பகுதியிலும், வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் அக்ரஹெர சந்தியிலும் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் 37 மற்றும் 39 வயதுடையவர்கள் என்றும், வலஸ்முல்ல மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில்…

Read More

17 மீனவர்கள் கைது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிப்ரவரி 13 முதல் 19 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.  இவர்கள் கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், 18 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.  இதனுடன், 12 மீன்பிடி படகுகள், ஒரு மோட்டார் சைக்கிள், 156 சட்டவிரோத மீன்பிடி வலைகள், 184 கடலட்டைகள்…

Read More

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்.

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 25ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளன. அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட…

Read More

கொழும்பில் வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.

கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – அத்துருகிரிய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். குறித்த நபர் 100இற்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.இந்த மோசடியை அவர் வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

வெளிநாட்டினரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து.

நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு இரண்டு வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.  விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த விபத்து இன்று (20) காலை 8 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.  குறித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பேருந்தை கவனக்குறைவாக முந்திச் செல்ல முற்பட்டபோது,…

Read More

சட்டவிரோதமாக வனப்பகுதியை சுத்தம் செய்த சந்தேக நபர் கைது.

ஹொரவப்பொத்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதவிய வனப்பகுதியின் ஒரு பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கபதிகொல்லேவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கப்புகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

சிங்கராஜ வனப்பகுதியில் காட்டுத்தீ.

நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஹட்டன் சிங்கராஜ வனப்பகுதிக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் சபையின் ஹட்டன் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு குடிநீர் வழங்கும் சிங்கராஜ நீர்த்தேக்கத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற ஒரு தனிநபர் அல்லது குழுவால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

வாய்வழி புற்றுநோய் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் வாய்வழிப் புற்றுநோயால் தினமும் மூன்று அல்லது நான்கு பேர் உயிரிழக்கின்றனர் என வாய்வழி மற்றும் முகவாய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்க கூறுகிறார். நாட்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய்வழி புற்றுநோய்கள் பதிவாகின்றன என்று தெரிவித்துள்ளார் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More