உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

கிரிபாவ பொலிஸ் பிரிவின் தம்சோபுர பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (வெப்ரவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபாவா பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்சோபுர பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்களுக்கும் கூடுதலாக வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து மாத்திரமே கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் சாரதிகளிடமிருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு வாகனங்களை நிறுத்தி வைக்கும் நேர அளவிற்கு ஏற்ப கட்டணத் தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அத்தோடு காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி…

Read More

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.

அநுராதபுரம், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் சனிக்கிழமையான இன்று (வெப்ரவரி 15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக, ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 250 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார ஆய்வாளர் கைது.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் குழுவினால் நேற்று (வெப்ரவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார். கலேவெல பகுதியில் பணியாற்றிவந்த பொது சுகாதார ஆய்வாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஹோட்டலின் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.200,000 லஞ்சம் பெற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்ட தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பேருந்து விபத்தில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று (வெப்ரவரி 15) அதிகாலை 4 மணியளவில் கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது. விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம் என கூறப்படுவதுடன்விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

எல்ல பகுதிக்கு பயணப்படும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் பரவியுள்ளதால் எல்ல ரொக் மலைத்தொடரில் உள்ள பாறைகள் வெப்பமடைந்து, பாறைகள் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ. எல். எம். உதய குமார தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதால்எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக நவீன் திசாநாயக்க நேற்று (வெப்ரவரி 14) நடைபெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நவீன் திசாநாயக்க முன்னர் விளையாட்டு, சுற்றுலா மற்றும் பெருந்தோட்டத் தொழில் அமைச்சராகவும், சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

குறைந்த வருமானம் கொண்ட பெரியவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு.

குறைந்த வருமானம் பெறும் பெரியவர்களுக்கான ரூ.3,000 கொடுப்பனவை இந்த மாதம் 20 ஆம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் இயக்குநர் சதுரா மிகிடும் தெரிவித்தார். இருப்பினும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக, கடந்த காலங்களில் குறிப்பிட்ட திகதியில் உதவித்தொகையை செலுத்த முடியாமல் முதியோர் சிரமப்பட்டனர். இதன் காரணமாக, இந்த மாதம் 20 ஆம் திகதி…

Read More

பதுளை – இராவண எல்ல வனப்பகுதியில் காட்டுத் தீ, அதிகளவான நிலப்பரப்பு தீயில் நாசமாகின.

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் வெப்ரவரி 13ம் திகதி இரவு கட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த காட்டுத்தியானது குறித்த வனப்பகுதியில் தனிநபரொருவர் அல்லது குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல்….

Read More

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் புதிர் நெல் வழங்கும் நிகழ்வு இனிதே இடம்பெற்றது.

“அவனருளாலே அவன் தாள் வணங்கி” இம்முறையும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் புதிர் நெல் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்திற்கு சொந்தமான விவசாயக்காணியில் விளைந்த நெல்ளையும் படுவான் பிரதேச வேளாண்மை செய்கையாளர்களால் ஆலயத்திற்கு வழங்கப்படும் நெல்லையும் ஆலய நிருவாகம் பகிர்ந்து பொதியிட்டு விஷேட வழிபாடுகள் நடாத்தி ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவார்கள். இந்த நிகழ்வு வருட வருடம் இடம்பெறுவதுண்டு. நேற்று(வெப்ரவரி 14) ஆலய பிரதம குருமு.கு.சச்சிதானந்தம் ஐயாவின் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்று புதிர் நெல் முறைப்படி…

Read More