கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
மோட்டார் வாகன வரியை உடன் குறைக்க வேண்டும் ; மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் கோரிக்கை
நடுத்தர மக்கள் கொள்வனவு செய்யும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் குறைக்க வேண்டும் என சிலோன் மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிலோன் மோட்டார் வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டில் அண்மையில் நிலவிய இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர் வாகன கொள்வனவு வீதம் சடுதியாக குறைவடைந்துள்ளது. வாகன இறக்குமதிக்காக முன்பதிவுகள் செய்தவர்கள் இயற்கை அனர்த்தங்களால்…

