இலங்கை மறுகட்டுமான திட்டத்திற்கு EFCITA வழங்கிய ரூ. 20 மில்லியன் நன்கொடை

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு புறக்கோட்டை  அத்தியாவசிய உணவுப்பொருட்கள்  இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினால் (EFCITA) இன்று 20 மில்லியன் ரூபா பணத்தொகை  நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நன்கொடை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க முன்னிலையில் நிதியமைச்சின் பிரதியமைச்சர் (பேராசிரியர்) அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் EFCITA வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். விநாயகசுந்தரம், செயலாளர் பி. சுப்ரமணியம், பொருளாளர்  ஹரிஹரன் மற்றும் முன்னாள் தலைவர்  நிஹால் செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டதுடன் …

Read More

தெமோதரையில் மண்சரிவு அபாயம் ; 34 குடும்பங்கள் இடம்யெர்வு!

பதுளை மாவட்டத்தின் எல்ல – தெமோதரை பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் அங்கிருந்த 34 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரஹாத் அபேவர்தன இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்துள்ளார். 34 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேரே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். தெமோதரை பகுதியில் உள்ள மண்மேடுகள் 250 மீற்றர் அடி சற்று முன்னோக்கி சரிந்து காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று புதன்கிழமை (10) தெரிவித்திருந்தது.

Read More

மூதூர் பகுதியில் வெள்ளத்தினால் செங்கல் சூளைகளும் பாதிப்பு!

மூதூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செங்கல் சூளை தொழிலாளர்களும் மீள தமது தொழில்களை செய்வதற்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். மூதூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக செங்கல் சூளைகளில் இருந்த செங்கற்கள் மற்றும் மூலப்பொருட்கள் என்பன வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தமது தொழிலை மீள ஆரம்பிக்க அரசு தமக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். மூதூர் பிரதேசத்தில் இருதயயுரம், ஷாபிநகர், ஜின்னாநகர்,…

Read More

கயந்த கருணாதிலக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலை!

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (11) காலை முன்னிலையாகியுள்ளார். முந்தைய அரசாங்கங்களின் போது விவசாய அமைச்சை செயற்படுத்துவதற்காக, இராஜகிரிய பகுதியில் கட்டிடமொன்றை வாடகைக்கு வாங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்கு கயந்த கருணாதிலக்க அவ் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராகவும், முன்னாள் ஊடக அமைச்சராகவும் கயந்த கருணாதிலக்க பணியாற்றியிருந்தார். இன்று காலை 9 மணியளவில் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை…

Read More

வீதிகளில் குவியும் அனர்த்தத்தால் பழுதடைந்த உணவுப் பொருட்கள்

கண்டி மாவட்ட அனர்த்தம் காரணமாக பலகோடி ரூபா பெறுமதியான பழுதடைந்த உணவுப் பொருட்கள் கம்பளை, கெலிஓயா, கஹட்டபிட்டிய முதலான பகுதிகளில் உள்ள பிராதன வீதிகளில் குவிந்துள்ளன. அவற்றை அகற்றுவது கூட பாரிய சிரமமாக உள்ளதாகத் தெரியவருகிறது. பல்லாயிரக்கணக்கான தொன்கள் எடை கொண்ட இப்பொருட்களை எங்கு எடுத்துச் செல்வது?  எங்கே? கொட்டுவது என்பன கூட பாரிய சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரிசி, மாவு, பருப்பு, வெங்காயம், மருந்துப் பொருட்கள், கட்டிடப் பொருட்கள், ஆடை அணிகள், வீட்டுத்தளபாடங்கள்   என விதம்…

Read More

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கழிவுகளை வீசிய நபர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கழிவுகளை வீசிய நபரொருவரை நேற்று புதன்கிழமை  (10) அதிவேக நெடுஞ்சாலையின் சீதுவை பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் சாரதி ஒருவர் 19வது கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் அதிவேக வீதியில் கழிவுப் பொருட்கள் அடங்கிய பையை வீசியதை அதிவேக வீதியில் சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டிருந்த அதிகாரிகள் அவதானித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அதிவேக நெடுஞ்சாலை சட்டத்தின் கீழ்…

Read More

குற்றச் செயல்களை மேற்கொள்ள பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட இருவர் கைது!

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த  ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேரா என்பவரின் தலைமையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளுவதற்கு பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு 10 பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள்…

Read More

சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம் – பிரதமர்

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அந்தத் தரவுகளைச் சேகரிப்பதற்கு மக்கள் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் நேற்று புதன்கிழமை (10) ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறினார். இயற்கை அனர்த்தங்களைக் குறைத்து, இயற்கையுடன் இணைந்து நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும்…

Read More

மருந்துப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை – ஹன்சக விஜேமுனி

நாட்டில் அனர்த்த நிலைமை ஏற்பட்டபோதும் அரச  வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு எதுவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்று பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.   கண்டி செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்த நிலைமைகளை அடுத்து நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என்று கூறப்படுவதில் எதுவித உண்மையும் இல்லை. போதியளவு மருந்துப் பொருட்கள் நாட்டில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அனர்த்த நிலைமைகளை அடுத்து பாதுகாப்புக் கருதியே முன்னெச்சரிக்கையாக…

Read More

மேஃபீல்ட் தோட்ட குளவிக்கொட்டுச் சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் விளக்கம்

மேஃபீல்ட் தோட்டப் பிரிவில் நவம்பர் மாதம் புதன்கிழமை 26ஆம் திகதி இடம்பெற்ற குளவித் தாக்குதலில் ஒரு தொழிலாளி காயமடைந்த சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளது. அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  குளவிக்கொட்டு சம்பவத்தின்போது நோயாளர் காவு வண்டி கிடைக்காததால் தோட்ட நிர்வாகம் உடனடியாக தோட்டத்திற்கு சொந்தமான லொறி மூலம் போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்தது. இருப்பினும்,  தற்காலிக வீதித் தடை காரணமாக  தொழிலாளி பின்னர் முச்சக்கரவண்டி மூலம் கொட்டகலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குச் சிகிச்சை…

Read More