வீதி விபத்துக்களால் 2570 பேர் உயிரிழப்பு 

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2427 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2570 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (9) பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துக் கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய…

Read More

 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 43,329 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் நான்கு  நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,989 ஆகும். அத்துடன், ஜெர்மனியிலிருந்து 4,399 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 4,735  சுற்றுலாப் பயணிகளும்,  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,053 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,128 சுற்றுலாப் பயணிகளும்,…

Read More

சர்வதேச மனிதாபிமான உதவிகளைக் கண்காணிக்க உயர்மட்ட தேசியக் குழு நியமனம்

நாட்டில் கடந்த வாரம் தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக நிவாரண உதவிகள் கிடைக்கின்றன. அந்த மனிதாபிமான உதவிகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு மக்களிடம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஓர் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் திங்கட்கிழமை…

Read More

டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம்

தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடி மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறக்க வேண்டியேற்படும் என்பதால், தற்போது அவை சிறியளவில் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த வாரம் முழுவதும்…

Read More

இன்றைய வானிலை செய்திகள்(09 12 2025)

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின்…

Read More

பணக் கொடுக்கல் வாங்கலில் தகராறு – தாக்குதலில் ஒருவர் பலி!

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான வீதிப் பகுதியில்  திங்கட்கிழமை (08) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலின்போது, காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் துடெல்ல, கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக நபர் ஒருவர், அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக…

Read More

சீரற்ற வானிலை ; தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு டயலொக் நிறுவனம், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளை பாதித்த அனர்த்த சூழ்நிலையின் விளைவாக, ஃபைபர்-ஆப்டிக் மற்றும் செப்பு கம்பிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தொலைத்தொடர்பு கேபிள்கள் பொது இடங்களில் சேதமடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வீதி பழுதுபார்க்கும் பணிகளின் போது சில நிலத்தடி தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள்…

Read More

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், வலுவான நீருள்ள இடங்களில் இறங்குவதையோ அல்லது குளிப்பதையோ பொதுமக்கள் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார். ஆபத்துகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏதேனும் அவசரப் பிரச்சினைகள் இருந்தால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களான  117 க்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதிக மழையினால் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும்…

Read More

முட்டையின் விலை அதிகரிப்பு!

சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் முட்டைகள் அழிவடைந்துள்ளன.  இதனால் சந்தையில் முட்டை ஒன்றின் விலை 40 முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதற்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 25 முதல் 30 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.  எதிர்வரும் காலங்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை…

Read More

நிவாரண உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திங்கட்கிழமை (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு பல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. புயலால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தொழில் முயற்சிகள் அழிந்து போனமை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை, பல உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட…

Read More