நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் – செயற்பாட்டை துரிதப்படுத்த வேண்டுகோள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துவது தொடர்பாக இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். அனர்த்தம் காரணமாக இழப்பீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எனவே, பணத்தை ஒரு தடையாக கொள்ளாமல், இழப்பீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்க தேவையான தகவல்களை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியதுடன், துல்லியமான தரவுகளை விரைவாகப் பெற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்….

Read More

மலையக பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டிட்வா சூறாவளியுடன் பெய்த கனமழையால் மலைப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஏற்கனவே நிரம்பி வழிவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. பல இடங்களில் ஏற்கனவே நிலம் விரிசல் அடைந்து வருவதாலும், அடுத்த சில நாட்களில் கனமழை பெய்தால், மீண்டும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். இதன் காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்திய வானிலை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில்…

Read More

அனர்த்தத்திற்கு பின்னான மீட்டெடுக்கும் திட்டம் – அனைத்து கட்சி தலைவர்களுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்

நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமையில் இருந்து, நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீள இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வேளைத்திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று (3) கலந்துரையாடவுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நடவடிக்கை காரியாலயத்தில் இன்று (3) மாலை 4.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன குறிப்பிடுகையில், நாட்டில் கடந்த காலங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு…

Read More

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக விஜயம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள கம்பளை கணபதி தோட்ட மக்களை நேற்று நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சாணக்கியன் இராசமாணிக்கம், திலித் ஜயவீர மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அதேபோன்று கண்டி மாவட்டத்துக்கும் சென்றுள்ளனர்.கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவும் இதன்போது கலந்துக்கொண்டுள்ளார். இதன்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமை…

Read More

கமநல அபிவிருத்தி திணைக்களம் – இழப்பீடு வழங்கும் நடவடிக்கை

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் விளைச்சல் தொடர்பில் விவசாயிகள் 1918 என்ற அவசர இலக்கம் ஊடாக கமநல காப்புறுதிச் சபைக்கு அறிவுறுத்த வேண்டும். ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கமநல மற்றும் கமநல காப்புறுதிச்சபை ஒன்றிணைந்து இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் விளைச்சலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கமநல மற்றும்…

Read More

பாகிஸ்தான் விமானம் இந்திய வான்வெளியில் பறப்பதற்கான அனுமதி..

இலங்கைக்கு மனிதாபிமான உதவியை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு இந்திய வான்வெளியில் பறப்பதற்கான அனுமதியை புதுடெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா செவ்வாய்க்கிழமை (2) “அபத்தமானது” மற்றும் “தவறான தகவல்” எனக் கூறி நிராகரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், விமான அனுமதி கோரிக்கை டிசம்பர் 1 ஆம் திகதி பிற்பகல் 1:00 மணியளவில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கிடைத்ததாகக் கூறினார். இந்திய…

Read More

இலங்கையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட , இலங்கையை மீட்டெடுக்க பல சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. அதன்படி, நிதி மற்றும் பொருள் ரீதியான நிவாரண உதவிகளை சில நாடுகள் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய, சர்வதேச மனிதாபிமான நட்பின் ஊடாக, நியூசிலாந்து, அவசர மனிதாபிமான நிவாரணத்தை ஆதரித்து, ஒரு மில்லியன் நியூசிலாந்து டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, எட்டு இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை இலங்கைக்கு…

Read More

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு! – முக்கிய அறிவிப்பு

ஏராளமான நிவாரணக் குழுக்கள் மற்றும் கனரக வாகனங்களின் வருகை காரணமாகப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகளைச் சுத்தம் செய்யும் பணி மற்றும் மீட்புப் பணிகளைத் தாமதப்படுத்துவதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளது. பொலில் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம் சில மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட இடங்களைப் படம்பிடிக்கும் அல்லது பார்வையிடும் வாகனங்கள், உந்துருளிகளின் வருகை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு இடையூறை விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, நிவாரணக் குழுக்கள் பிரதேச செயலாளர்களுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு…

Read More

அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளைக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு நியமனம்

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ நிதியமாக நிறுவப்பட உள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர். தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில்…

Read More