நாட்டை மீட்டெடுக்க களத்தில் மக்கள்

லங்கையின் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பல மாவட்டங்கள் நிர்மூலமாகி உள்ளன. இதில் பதுளை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளும் அதிரித்துள்ளன. இந்நிலையில் பதுளை மாவட்டத்தை மீள கட்டியெழுப்பும் நோக்கில் மாத்தறையில் இருந்து குழுவொன்று வருகை தந்துள்ளது. சுமார் 826 பொது மக்கள் ஒன்றுகூடிய பதுளையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புனரமைப்பு பணிகளுக்கு தேவையான இயந்திரங்களும் உபகரணங்களும் மக்களால் கொண்டு வரப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சியாளர்கள் குழுவுடன் பேக்கோ லோடர்கள், செயின்சாக்கள், தண்ணீர் பவுசர்கள், சுத்தப்படுத்தும் உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன….

Read More

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார இதனை தெரிவித்துள்ளார். மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் மின் கட்டணம் சேர்க்கப்படும் என்றும், இந்த நேரத்தில் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மானி வாசிப்புகள் மற்றும் மின் கட்டணப்…

Read More

மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.   அடுத்த சில நாட்களில் நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும், இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் மழை பெய்யும் நிலை அதிகரிக்கும். குறிப்பாக, வடக்கு, வட – மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும்  மழை பெய்யும் நிலை அதிகரிக்கக்கூடும். எனவே, வானிலை மாற்றம் தொடர்பான மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள்…

Read More

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் – வெளியான அறிவிப்பு

டிசம்பர் மாதத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான விலை திருத்தம் இருக்காது என்பதை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்  உறுதிப்படுத்தியுள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாகவும், 5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் காணப்படுகிறது.

Read More

நேரடி உதவிகளினால் ஆபத்து ஏற்படும் அபாயம் – கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும்போது பிரதேச செயலகங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் உதவிகளை வழங்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே கேட்டுக்கொண்டுள்ளார். நன்கொடையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தனது பொறுப்பு என்பதாலும், நேரடியாக உதவிகளை விநியோகிக்கும்போது ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாலும், நன்கொடையாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 397 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 63,047 குடும்பங்களைச் சேர்ந்த…

Read More

மக்களுக்காக முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி…!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செயற்திறனுடனும் வழங்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றையதினம் (29) இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நிலைமையில் மக்களுக்காக முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் நன்கு ஒருங்கிணைந்து பணியாற்றி,…

Read More

வேகமாக உயர்ந்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம் – மக்களை அவசரமாக வெளியேற உத்தரவு!

களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டுத் தடை நிரம்பி வழிகிறது என்று கொழும்பு மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிலைமை சுற்றியுள்ள தாழ்வான பிரதேசங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் மாலபே-கடுவெல பகுதி மற்றும் அருகிலுள்ள பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மாலபே ஆண்கள் கல்லூரிக்கு அல்லது பிட்டுகல யசோதரா மகா வித்தியாலயத்திற்குச் செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

மக்களின் மனதை வென்ற கலைஞர் மறைந்தார்.

இலங்கையின் பிரபல கானா பாடகர் “நவகம்புர கணேஷ்” உடல்நலக்குறைவால் இன்று(29 11 2025) மாலை காலமானார். தன்னுடைய உத்வேகமான குரலாலும், வித்தியாசமான சிகையலங்காரம், ஆடை அணிகலன்களாலும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் “நவகம்புர கணேஷ்”. பல மொழிகளில் மிக லாபகமாக பாடல்களை பாடி ரசிகர்களை ஆடவைத்து மகிழ்ச்சிப்படுத்தி அழகுபார்ப்பார். குறிப்பாக இவர் பாடும் கானா பாடல்களுக்கும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாடல்களின் வரிகளை நகைச்சுவையாக கோர்த்து பாடும் அழகிற்கும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் அதிகம். “மட்டக்குழியில கட்ட கவுனோட” என்ற பாடலை…

Read More

நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.  டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் 100இற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதுடன் எண்ணற்றவர்கள் காணாமல் போயுள்ளனர்.  இந்நிலையில், மேலும் தீவிரமடைந்து வரும் காலநிலையின் சீற்றம் காரணமாக தற்போதைய நிலைமை இன்னும் மோசமடையலாம் என கூறப்படுகின்றது.  இதற்கிடையில் ஏற்படும் பாதிப்புக்களையும் உயிரிழப்புக்களையும் குறைக்கும் முகமாகவும் மக்கள் பாதுகாப்பை உறுதி…

Read More

தன்னார்வலர்களாக களம் இறங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்.

பேரிடர் மேலாண்மை மையத்தில் இந்த நெருக்கடியான நேரத்தில் தங்கள் உறுதியான ஆதரவை தன்னார்வலர்களாக வழங்கி வரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு மக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும். உங்கள் சேவை தொடரட்டும்.

Read More