இஸ்ரேலில் இலங்கையர் உயிரிழப்பு

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியைச் சேர்ந்த குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த மரணம் குறித்து இஸ்ரேல் பொலிஸின் இன்டர்போல் கிளை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர் இலங்கை அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு முகவரகத்தினூடாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) பதிவாகியுள்ளது. பொகவந்தலாவை – மோரா பகுதியிலுள்ள பெருந்தோட்டப் பயிற்சி நிலையத்தில் செயன்முறைப் பட்டறைக்காக வந்த மாணவர்கள் குழுவே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர் குழுவில் உள்ள 06 மாணவர்கள் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

பதுளை – செங்கலடி வீதியின் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பதுளை – செங்கலடி வீதியின் மரபாலம் பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாஓயாவிலிருந்து செங்கலடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்துவந்த டிராக்டருடன் மோதியதில், நேற்று வியாழக்கிழமை (13) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.  விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் டிராக்டரின் சாரதி காயமடைந்து கரடியனாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.  இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி;…

Read More

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) நடத்தப்பட்டது.  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக காலை 6.30 மணியளவில் இந்த நடைபயணம் ஆரம்பமானது. குறித்த நடைபயணத்தில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மாவட்ட செயலர் ம. பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.  இந்த நடைபவனி கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லங்கா ரைட் 2025

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்படும் ‘லங்கா ரைட் 2025’ சைக்கிள் ஓட்டப் போட்டி எதிர்வரும் டிசம்பர் 18 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் 18ஆம் திகதி லேக் ஹவுஸ் வளாகத்தில் தொடங்கி, பேலியகொடை பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் இப்போட்டியின் முதல் நாளில் 106 கி.மீ. பயணித்து கன்னொருவயை அடைந்து இரண்டாம் நாள் கண்டியில் இருந்து அனுராதபுரம் வரையிலும், மூன்றாம் நாள்…

Read More

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை கண்காணிக்க சென்ற கோட்டை நீதவான்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட 9 சந்தேக நபர்களைக் கண்காணிக்க கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே சென்றுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த 9 பேர் குறித்து கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் வழக்கறிஞரையும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் சந்தேக நபர்கள் குழுவையும் நீதவான்…

Read More

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்

Read More

தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் மருத்துவர்கள்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நவம்பர் 17 முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது சுகாதார மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கான மருந்துச் சீட்டுகளை வழங்குவதில்லை என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தங்கள் பிரச்சினைகள் எதிர்பார்த்தபடி தீர்க்கப்படாததால், இது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து…

Read More

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்காக போராடும் விவசாயிகளுக்கு தீர்வு

அடுத்த பருவத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ. 220க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை ரூ. 150க்கும் வாங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அப்போது சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 200 ஆகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை ரூ. 300 ஆகவும் அதிகரிக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்மொழிந்து அமைச்சர் இந்த தகவலை…

Read More
paddy filed agriculture

நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம்!

விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.  விதை நெற்செய்கைக்கு வெள்ளம், வறட்சி, நோய்கள், பூச்சித் தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களுக்கு இந்தத் திட்டம் காப்பீடு வழங்குகிறது.  ஒரு ஏக்கர் செய்கைக்காக ஒரு போகத்திற்கு ரூ. 13,600/- தவணை செலுத்துவதன் ஊடாக ஒரு ஏக்கருக்கு…

Read More